ICC Women’s T20 Ranking: தரவரிசையில் தீப்தி செய்த சம்பவம்.. பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்தி முதலிடம்!
Deepti Sharma No.1 ranking in T20I Bowling: தீப்தி சர்மா முதல் முறையாக டி20 சர்வதேச பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தீப்தி சர்மா தனது தரவரிசையை மேம்படுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று அதாவது 2025 டிசம்பர் 23ம் தேதி வெளியிட்டது. இந்த முறை, தரவரிசையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, இந்திய மகளிர் அணியின் (Indian Womens Cricket Team) நட்சத்திர ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா டி20 தரவரிசையில் பந்துவீச்சில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதற்கிடையில், தரவரிசை பட்டியலில் ஸ்மிருதி மந்தனா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். அதாவது பேட்ஸ்மேன்களுக்கான ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) தனது முதலிடத்தை இழந்துள்ளார். மீண்டும் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர பேட்ஸ்மேனும் கேப்டனுமான லாரா வால்வார்ட் முதலிடத்தை பிடித்தார். இதற்கு காரணம், அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதே ஆகும்.
ALSO READ: காஷ்மீர் சிறுமியின் ஆசை.. ஸ்மிருதி மந்தனா செய்த செயல்.. நெகிழ்ந்த நெட்டிசன்கள்..!




தீப்தி சர்மா முதல் முறை:
Top of the world 📈
Congratulations to Deepti Sharma on becoming the No. 1⃣-ranked bowler in the ICC Women’s T20I rankings for the first time 👏#TeamIndia | @Deepti_Sharma06 pic.twitter.com/S10s0MacGB
— BCCI Women (@BCCIWomen) December 23, 2025
தீப்தி சர்மா முதல் முறையாக டி20 சர்வதேச பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தீப்தி சர்மா தனது தரவரிசையை மேம்படுத்தியுள்ளார். முன்னதாக, இந்த தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் அன்னாபெல் சதர்லேண்ட் முதலிடத்தை பிடித்திருந்தார். தற்போது தீப்தி சர்மா அவரை முந்திவிட்டார். இது தீப்தி சர்மா கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனையாகும்.
2ம் இடத்திற்கு சரிந்த ஸ்மிருதி மந்தனா:
தென்னாப்பிரிக்காவின் கேப்டன் லாரா வால்வார்ட் ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான உள்நாட்டு ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் வால்வார்ட் சதம் அடித்து, தொடர் நாயகி விருதைப் பெற்றார். இந்த செயல்திறன் அவருக்கு கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த மதிப்பீட்டைப் பெற்றுத் தந்தது, இந்திய பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனாவை முந்தி நம்பர் 1 தரவரிசை பேட்ஸ்மேனானார். லாரா வால்வார்ட் இதற்கு முன்பும் முதல் இடத்தில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை மகளிரணி – இந்திய மகளிரணி அபார வெற்றி
டி20 தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்:
இந்திய ஆடவர் அணியை போலவே டி20 தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டி20 பேட்டிங்கில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆட்டமிழக்காத அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 இடங்கள் முன்னேறி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார். அதாவது, தற்போது 9வது இடத்தில் உள்ளார். டி20 தரவரிசையில் பட்டியலில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 3வது இடத்திலும், ஷஃபாலி வர்மா 10வது இடத்திலும் உள்ளனர். இதற்கிடையில், பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி 5 இடங்கள் முன்னேறி 36வது இடத்தைப் பிடித்துள்ளார்.