டிஜிட்டல் ஊடகத்துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளை சுவாரஸ்யமான முறையில் செய்திகளாக வழங்குவதில் வல்லவர். இதுபோக, லைஃப்ஸ்டைல், இந்தியா, உலகம், க்ரைம் உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் தருபவர். தற்போது TV9 தமிழ் இணையதளப்பிரிவில் Senior Sub-Editor ஆக பணியாற்றி வருகிறார்.
Monsoon Kitchen Tips: மழைக்காலத்தில் சமைக்கும் பொருளை நாசம் செய்யும் ஈரப்பதம்.. பாதுகாப்பது எப்படி..?
Food Preservation Monsoon: மழைக்கால ஈரப்பதத்தால் சமையலறைப் பொருட்கள் கெட்டுப்போவதைத் தடுக்க, மாவு வகைகளில் பிரியாணி இலை, பிரட்டில் இஞ்சி, சர்க்கரையில் கிராம்பு, அரிசியில் கறிவேப்பிலை/வேப்பிலை சேர்க்கலாம். சமையலறையை சுத்தமாகவும், வறண்டதாகவும் வைத்திருப்பது, காற்றோட்டத்தை உறுதிசெய்வது, மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்துவதும் அவசியம்.
- Mukesh Kannan
- Updated on: Jul 30, 2025
- 3:45 pm
Health Tips: தினமும் ஒரே ஒரு கிராம்பு மென்று சாப்பிட்டு பாருங்க.. இந்த பிரச்சனைகள் சரியாகும்..!
Eat One Clove Daily: தினமும் ஒரு கிராம்பு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இருமல், பல் பிரச்சனைகள், வாய் துர்நாற்றம் போன்றவற்றைப் போக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆனால், அதிக அளவில் உட்கொள்வது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- Mukesh Kannan
- Updated on: Jul 30, 2025
- 2:48 pm
India – England 5th Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?
Oval History: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி 2025 ஜூலை 31 முதல் 2025 ஆகஸ்ட் 4 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Jul 30, 2025
- 1:47 pm
India – England 5th Test: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?
Gautam Gambhir-Groundsman Clash: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஓவல் மைதானத்தின் கண்காணிப்பாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானப் பணியாளர், பயிற்சி அமர்வின் போது ஆடுகளத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருக்குமாறு கூறியதால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
- Mukesh Kannan
- Updated on: Jul 30, 2025
- 11:16 am
India’s Kennington Oval Record: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?
India vs England 5th Test: இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டி கென்னிங்டன் ஓவலில் நடைபெறவுள்ளது. ஓவலில் இந்தியாவின் வெற்றி விகிதம் குறைவு என்றாலும், 2021ல் விராட் கோலி தலைமையிலான அணி பெற்ற வெற்றி நம்பிக்கை அளிக்கிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, தொடரை சமன் செய்ய ஓவல் டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Jul 30, 2025
- 8:14 am
பெட்ரோல் பம்ப் அருகே பனை மரத்தில் எரிந்த தீ.. போராடி அணைத்த தீயணைப்பு படை!
தூத்துக்குடி அருகே ஒரு பெட்ரோல் பம்ப் அருகே தீ விபத்து ஏற்பட்டது. அதில் பனை மற்றும் அகாசியா மரங்கள் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், தீயை தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான குறிப்பிட்ட இடம் மற்றும் காரணம் இன்னும் தெரியவில்லை.
- Mukesh Kannan
- Updated on: Jul 29, 2025
- 11:28 pm
மோசமான சாலை வசதி! 3 கி.மீ நடந்து பள்ளிக்கு செல்லும் பழங்குடியின மாணவர்கள்..!
ஆந்திரப் பிரதேசத்தின் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் தங்கள் பள்ளியை அடைய சேற்று, வழுக்கும் பாதைகள் வழியாக கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் வெள்ளம் எளிதில் ஏற்பட்டு, கனமழையின் போது கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சாலை இணைப்பு இல்லாததால் மாணவர்கள் தாமதமடைவது மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமும் ஆபத்தில் உள்ளது என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
- Mukesh Kannan
- Updated on: Jul 29, 2025
- 11:17 pm
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்.. சிரித்த முகத்துடன் வழங்கிய அமைச்சர் சேகர் பாபு!
கீழ்ப்பாக்கம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சர் சேகர் பாபு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் படித்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ. 138 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Jul 29, 2025
- 11:03 pm
Health Tips: காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகளா..? சர்க்கரை நோயாக இருக்கலாம்..!
Diabetes Symptoms in the Morning: காலை எழுந்தவுடன் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், சோர்வு, பார்வை மங்கல், தலைவலி, கால்களில் கூச்சம் போன்றவை நீரிழிவின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றை அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்.
- Mukesh Kannan
- Updated on: Jul 29, 2025
- 10:06 pm
Virat Kohli: 2019ல் விராட் கோலியை நீக்க திட்டம் போட்டதா ஆர்சிபி? முன்னாள் ஆல்ரவுண்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Moeen Ali Reveals Shocking RCB Plan: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 2025 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது. ரஜத் படிதார் தலைமையிலான அணியில் விராட் கோலியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால், மொயீன் அலி, 2019ல் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க RCB திட்டமிட்டதாகவும், பார்த்திவ் படேலை கேப்டனாக நியமிக்க முயற்சித்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: Jul 29, 2025
- 9:08 pm
Chicken Fry Recipe: பேச்சிலர்ஸூக்கு பெயர்போன ரெசிபி.. எளிமையாக சிக்கன் ஃப்ரை செய்வது எப்படி?
Easy Chicken Fry Recipe: இந்த சுவையான சிக்கன் பிரை செய்முறை, தொடக்கக்காரர்களுக்கும் எளிதானது. மசாலா பொருட்களைப் பயன்படுத்தி, சிக்கனை ஊற வைத்து, எண்ணெயில் பொரித்து, பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி செய்யலாம். தயிர் சேர்த்து செய்வதால் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
- Mukesh Kannan
- Updated on: Jul 30, 2025
- 12:02 pm
Health Tips: உங்கள் உடல்நலத்திற்கு ஏற்ற தூக்க நிலை எது? இடது பக்கமா..? வலது பக்கமா..?
Best Sleep Position: சரியான தூக்க நிலை நம் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். பக்கவாட்டில் தூங்குவது செரிமானம் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது. முதுகில் தூங்குவது முதுகுவலிக்கு நிவாரணம் அளிக்கும். ஆனால், மூச்சுத்திணறல் உள்ளவர்கள் முதுகில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். அமில ரிஃப்ளக்ஸ் உள்ளவர்கள் இடது பக்கம் தூங்கலாம். கர்ப்பிணிகள் கடைசி மாதங்களில் முதுகுப்புறம் மற்றும் வலது பக்கம் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
- Mukesh Kannan
- Updated on: Jul 29, 2025
- 6:40 pm