துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்.. விமான சேவைகள் முடக்கம்..
Massive Fire Near Dubai Airport: மத்திய கிழக்கில் தற்போதைய மோதல் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஈரான் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அமீரகம் தற்போது அதிக இலக்குகளுக்கு உள்ளாகும் நாடாக மாறியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் சூழலுக்கு இடையே, துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றின் மீது ஈரானின் ட்ரோன் தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த எண்ணெய் கிடங்கு பற்றி எரிந்ததால், துபயாஃக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவசர கால மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: அமெரிக்கப் போர்க்கப்பல் ‘ஆபிரகாம் லிங்கன்’ சிதைக்கப்பட்டதா?.. ஈரானின் புகாரும், அமெரிக்காவின் மறுப்பும்.
எண்ணெய் கிணறு மீது தாக்குதல்:
Large fire reported in the vicinity of Dubai International Airport after an Iranian drone attack tonight. pic.twitter.com/XmIvEq2KTu
— OSINTtechnical (@Osinttechnical) March 16, 2026
இதுபற்றி துபாய் ஊடக அலுவலகம் (Dubai Media Office) வெளியிட்ட தகவலின்படி, விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு எண்ணெய் கிணற்றின் மீது ட்ரோன் தாக்கியதில் பெருமளில் தீப்பிடித்தது. துபாய் சிவில் டிஃபென்ஸ் (Civil Defence) குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையப் பாதுகாப்பு:
இந்த தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலைய செயல்பாடுகள், அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய நிலையில் நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, விமான நிலையத்திற்கு அருகில் பதிவாகும் முதல் ட்ரோன் அச்சுறுத்தல் இதுவல்ல என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது இப்பிராந்தியத்தில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருவதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்:
Dubai Civil Aviation Authority announces the temporary suspension of flights at Dubai International Airport as a precautionary measure to ensure the safety of all passengers and staff. Travellers are advised to contact their respective airlines for the latest updates regarding…
— Dubai Media Office (@DXBMediaOffice) March 16, 2026
“ட்ரோன் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துபாய் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி (DCAA) தெரிவித்துள்ளது. இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துபாய் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி அறிவித்துள்ளது.
பயணிகள் தங்களது விமானப் பயணம் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது குறித்த அடுத்தடுத்த தகவல்கள் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் உடனுக்குடன் அறிவிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடரும் மோதல் போக்கு:
மத்திய கிழக்கில் தற்போதைய மோதல் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஈரான் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அமீரகம் தற்போது அதிக இலக்குகளுக்கு உள்ளாகும் நாடாக மாறியுள்ளது. பெரும்பாலான ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டாலும், இத்தகைய தாக்குதல்கள் வளைகுடா பிராந்தியத்தின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதையும் படிக்க: ஈரான் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டது.. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தகவல்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் ஈரானின் முக்கிய இடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் இத்தகைய சிவிலியன் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.