AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஃபுல் ஆக்‌ஷன்… இரண்டு மில்லியன் பார்வைகளைக் கடந்தது கலிஃபா படத்தின் ட்ரெய்லர்

Khalifa Trailer Movie Trailer | நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கலிஃபா. இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஃபுல் ஆக்‌ஷன்… இரண்டு மில்லியன் பார்வைகளைக் கடந்தது கலிஃபா படத்தின் ட்ரெய்லர்
கலிஃபாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Aug 2026 12:37 PM IST

மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து தனது கடின உழைப்பின் காரணமாக மக்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் பிரித்விராஜ் சுகுமாரன். மேலும் பிரித்விராஜ் சுகுமாரன் எந்த மொழியில் படங்களில் நடித்து வந்தாலும் இவரது நடிப்பைப் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அடுத்ததாக மலையாள சினிமாவில் வெளியாக உள்ள படம் கலிஃபா.

இந்தப் படத்தினை இயக்குநர் வைசாக் எழுதி இயக்கி உள்ளார். மேலும் கலிஃபா படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதன்படி நடிகர்கள் வித்யுத் ஜம்வால், நீல் நிதின் முகேஷ், கிருத்தி ஷெட்டி, மாளவிகா ஷர்மா, சத்யராஜ், இந்திரன்ஸ், ஷம்மி திலகன், நரேன், செம்பன் வினோத் ஜோஸ், மோகினி மற்றும் சிவாஜித் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

இரண்டு மில்லியன் பார்வைகளைக் கடந்தது கலிஃபா படத்தின் ட்ரெய்லர்:

இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நாயகனாக நடித்து உள்ள கலிஃபா படம் வருகின்ற 20-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை நேற்று படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் ட்ரெய்லர் தற்போது வரை யூடியூபில் 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… AA23: லோகேஷ் கனகராஜின் டிசி பட வெற்றி.. கேக் வெட்டி கொண்டாடிய AA23 படக்குழு!

கலிஃபா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Rajinikanth: சினிமாவில் 51வது வருடத்தில் சூப்பர் ஸ்டார்… ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட தர்மன் படக்குழு!

Follow Us