தகப்பன் படத்திற்கு சென்சார் குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்!
Actor Jiivas Thagappan Movie Censor Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் மொழியில் வெளியாக உள்ள தகப்பன் படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜீவா (Actor Jeeva). இவர் மறைந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் இளைய மகன் ஆவார். தமிழ் சினிமாவில் தயாரிபபளரின் மகனாக அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியான பலப் படங்கள் தற்போதும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்பு எல்லாம் அதிகமாக ரொமாண்டிக் காமெடி ட்ராமா பாணியில் உருவாகும் படங்களில் நடித்து வந்த நடிகர் ஜீவா தற்போது கதைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான தம்பி தலைவர் தலைமையில் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவாவின் நடிப்பில் தமிழ் மொழியில் அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் இவரது நடிப்பில் தமிழ் மொழியில் அடுத்தடுத்து தகப்பன் மற்றும் ஜாலியா இருந்த ஒருத்தன் ஆகியப் படங்களின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




தகப்பன் படத்திற்கு சென்சார் குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா?
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களில் முதலாவதாக தகப்பன் படம் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ளது. ஜீவாவின் நடிப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் அப்பா மகன் பாசத்தை மையமாக வைத்து எடுத்துள்ளனர். மேலும் நடிகர் ஜீவா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் தகப்பன் படம் வருகின்ற 24-ம் தேதி டிசம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலம் அளவு உள்ள நிலையில் படத்தின் சென்சார் அப்டேட் என்ன என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தணிக்கை குழு இந்த தகப்பன் படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் ஃபர்சி 2 தொடரின் ஷூட்டிங் – வைரலாகும் போட்டோஸ்!
நடிகர் ஜீவா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
(U)nfiltered and (A)lluring 🔥
#Thagappan is officially U/A certified packed with raw emotions!
#ThagappanWorldwideDec24
@larkstudios1 @JiivaOfficial @rajisha_vijayan @LakshmyRamki @themelvindavid @ravenkatdir83 @marshall_musicc @dopmsukumar @Inagseditor @MaheshMathewMMS #BalaKumar @dineshashok_13 @Udaykumar_Mix @prithivipradeep @kumarkarupannan @thinkmusicindia @ZeeTamil @proyuvraaj
— Jiiva (@JiivaOfficial) November 24, 2026
Also Read… ஆத்தி என்னாலே முடியலயே… இரண்டு வானம் படத்திலிருந்து வெளியானது 2-வது சிங்கிள்!