மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படம் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்
Manjanathi Movie Shooting Update Here | தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj). இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்கள் இவரின் இயக்கத்தில் நடிக்க வரிசைக்கட்டி காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சமூகத்தில் நடைபெறும் சாதிய ரீதியிலான பாகுபாடுகள் மற்றும் வன்கொடுமைகளை மையமாக வைத்து இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் பைசன் காளமாடன். கபாடி விளையாட்டை மையமாக வைத்து உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் உருவான இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து இருந்தார்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷின் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மஞ்சணத்தி படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.




மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படம் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்:
இந்தப் படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைப்பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் கதிர், பிரியங்கா அருள்மோகன், கயாடு லோஹர், விது மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் நடிக்கும் மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு 55 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இருப்பினும், இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் காயடு லோஹர் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரின் கால அட்டவணையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக, அடுத்தகட்டப் படப்பிடிப்பு டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படப்பிடிப்பில் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளைத் தொகுக்கும் (எடிட்டிங்) பணியை மாரி செல்வராஜ் தொடங்கியுள்ளார்.
Also Read… ஓ.எம் படத்திலிருந்து வெளியானது ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Manjanathi Shooting Update 🎬.
Director #MariSelvaraj’s #Manjanathi, starring Kathir, has successfully completed 55 days of shooting👍.
However, the next schedule has been postponed to December or January due to the scheduling clash between the film’s female leads, #KayaduLohar and #PriyankaMohan .
Meanwhile, Mari Selvaraj has utilised this shooting break to begin editing the portions already filmed.
Follow 👉 @FilmyBowlTamil
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) November 24, 2026
Also Read… அரசியலில் குதிக்கிறாரா திரிஷா? இளைய புரட்சித் தலைவி பெயரில் பேரவை- லோகோ வெளியீடு!