AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவின் கேரக்டர் இதுவா? வைரலாகும் தகவல்

Silambarasan charecter for new movie update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் தற்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தப் படத்தில் அவரின் கதாபபத்திரம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவின் கேரக்டர் இதுவா? வைரலாகும் தகவல்
சிலம்பரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Nov 2026 15:01 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan). இவரது நடிப்பில் தமிழ் மொழியில் உருவாகும் படம் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் மொழியில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது அரசன் படம் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்த அரசன் படம் எப்போது வெளியாகும் என்று சிலம்பரசனின் ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சிலம்பரசனின் அரசன் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. மேலும் நடிகர் சிலம்பரசன் அரசன் படத்திற்கு பிறகு இயக்குநர் கீர்த்தீஸ்வரன் உடன் கூட்டணி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் படத்தில் சிம்புவின் கேரக்டர் இதுவா?

இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, டியூட் (Dude) திரைப்படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கவுள்ள அடுத்த படத்தில், நடிகர் சிலம்பரசன் ஒரு காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இதற்காக, அக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்வாகைப் பெறுவதற்காக, சிலம்பரசன் டி.ஆர். தினமும் சுமார் 2 மணிநேரம் உடற்பயிற்சிக் கூடத்தில் (gym) தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலோ அல்லது தாமதமானால் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலோ தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… என்னைப் போலவே.. தனது மகன்கள் குறித்து தனுஷ் தெரிவித்த விஷயம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் இந்த வாரம் ஃபேமிலி வீக்… எமோஷ்னலான போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!

Follow Us