தொடர் வெற்றி… சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூர்யா? சினிமா வட்டாரங்களில் பரவும் தகவல்!
Reports suggest that actor Suriya has increased his remuneration | நடிகர் சூர்யா இந்த 2026-ம் ஆண்டில் தனது சினிமா கெரியரில் சிறந்த ஆண்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் சம்பளத்தை உயர்த்தியதக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் மொழியில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யாவின்ந் அடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி தொடர்ந்து தமிழ் மொழியில் உள்ள இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து வந்த நிலையில் கடந்த சில படங்களுக்கு மற்ற மொழி இயக்குநர்களின் இயக்கத்தில் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இறுதியாக வெளியான இரண்டு படங்களான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் சீன் என இரண்டு படங்களையும் தெலுங்கு மற்றும் மலையாள மொழி இயக்குநர்கள் இயக்கி இருந்தனர்.
அது மட்டும் இன்றி நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று வரும் நடிகர் சூர்யா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.




தொடர் வெற்றி… சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூர்யா?
அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் சீன் ஆகிய மூன்று தொடர்ச்சியான வெற்றிப் படங்களுக்குப் பிறகு, சூர்யாவின் சந்தை மதிப்பு உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்காக அவருக்கு 65 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்ட நிலையில், தனது அடுத்த படத்திற்கு அவர் 75 கோடி ரூபாய் ஊதியமாகக் கோருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், சுமார் 23 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான சீன் திரைப்படம், உலகம் முழுவதும் 260 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வலுவான பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் ஓடிடி (OTT) ஒப்பந்தங்கள் காரணமாக, சூர்யாவின் ஊதியம் அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகின்றது.
Also Read… உங்களுக்கு எப்படி கருணை காட்டமுடியும்? முனியம்மாளை கேள்வியால் தாக்கிய விஜய் சேதுபதி – ப்ரோமோ இதோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Suriya Reportedly Demands ₹75 Crore for His Next Film!
After delivering three consecutive hits with #Karuppu, #VishwanathAndSons and #Scene, Suriya’s market value is reportedly rising.
He was reportedly paid ₹65 crore for VAS and is now said to be quoting ₹75 crore for his next project.
Meanwhile, Scene, made on a reported budget of ₹23 crore, has reportedly grossed over ₹260 crore worldwide.
With strong box-office numbers and OTT deals, Suriya’s remuneration is reportedly increasing.
— Filmyscoops (@Filmyscoopss) November 21, 2026
Also Read… உறுதியானது சூர்யாவின் 50-வது படம்? வைரலாகும் தகவல்