Anirudh-Kavya Maran: கமல்ஹாசன் முதல் ரஜினிகாந்த் வரை.. அனிருத் – காவியா மாறனின் திருமண வரவேற்பில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள்!
Anirudh-Kavya Maran Reception: தென்னிந்திய சினிமாவில் தனது இசை மற்றும் பாடல்களின் மூலம் மக்களை ஈர்த்து வைத்திருப்பவர் அனிருத் ரவிச்சந்தர். இவருக்கும், காவியா மாறனுக்கு கடந்த 2026 நவம்பர் 11ம் தேதியில் திருமணம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரின் திருமண வரவேற்பு இன்று (21/11/2026) சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள் யார் யார் என பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் மக்களிடையே இசையமைப்பாளராக மனதில் மாபெரும் இடம்பிடித்திருப்பவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழி படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். இவரின் இசையமைப்பில் தமிழில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் ரஜினிகாந்த் (Rajinikanth) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகியுள்ளது. அனிருத், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் மேலாளர் மகளும், சன் ரைஸஸ் ஆப் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் மேலாளருமான் காவியா மாறனை (Kavya Maran) காதலித்துவந்தார். இவர்கள் இருவரின் காதல் கடந்த 2026 நவம்பர் 11ம் தேதியில், குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணத்தில் இணைந்துள்ளது.
இவர்கள் இருவரின் திருமணம் கிரீஸ் நாட்டில் மிக பிரம்மாண்டமாக நடந்த நிலையில், இன்று (21/11/2026 சென்னையில் திருமண வரவேற்பு சிறப்பாக நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துள்ளது கொண்டனர். இந்நிலையில் இதில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு – முதல்வர் விஜய் வாழ்த்து
அனிருத் – காவியா மாறனின் திருமண வரவேற்ப்பில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள்:
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவியா மாறனின் திருமண வரவேற்பில் அதிகமாக தமிழ் பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், நடிகை ராதிகா சரத்குமார், ராகவா லாரன்ஸ், நடிகர் கார்த்தி, சதீஷ், நடிகர் பிரபு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பம், ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர்.
முதல்வர் விஜய் மற்றும் ரஜினிகாந்த் கலந்துகொண்டது குறித்து வைரலாகும் பதிவு:
#CMVijay, Superstar #Rajinikanth and #Stalin in a single frame📸 https://t.co/e9fkXZy2IG
— AmuthaBharathi (@CinemaWithAB) November 21, 2026
பிரம்மாண்டமாக நடந்த அனிருத் – காவியா மாறனின் திருமண வரவேற்பு:
அனிருத் மற்றும் காவியா மாறனின் திருமண வரவேற்பு சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா என்ற இடத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இசை, காதல் மற்றும் ஒரு நீண்ட பயணம்… அஜித்துடன் காரில் பயணம் சென்ற ஷாலினி – வைரலாகும் வீடியோ!
இந்த நிகழ்ச்சியானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வை இந்த நிகழ்ச்சியின் மீதே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.