AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இசை, காதல் மற்றும் ஒரு நீண்ட பயணம்… அஜித்துடன் காரில் பயணம் சென்ற ஷாலினி – வைரலாகும் வீடியோ!

Ajith and Shalini Car Drive: தமிழில் ரசிகர்கள் மத்தியில் நடிகர்கவும், கார் ரேஸராகவும் பிரபலமானவர் அஜித் குமார். இவர் தற்போது டேர் டெவில் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் நிலையில், கார் ரேஸில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். இந்நிலையில் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் காரில் பயணம் செய்வது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இசை, காதல் மற்றும் ஒரு நீண்ட பயணம்… அஜித்துடன் காரில் பயணம் சென்ற ஷாலினி – வைரலாகும் வீடியோ!
அஜித் மற்றும் ஷாலினிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 21 Nov 2026 19:41 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் சினிமாவில் மற்றும் நிஜ வாழ்க்கையில் சிறந்த ஜோடியாக இருந்துவருபவர்கள்தான் அஜித் குமார் (Ajith Kumar) மற்றும் ஷாலினி அஜித் குமார் (Shalini Ajithkumar). இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் சினிமாவில் ஒன்றாக இணைந்து நடித்திருந்த நிலையில், பின் காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் தற்போதுவரையிலும் முன்னணி கதாநாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. 64வது திரைப்படமாக டேர் டெவில் படத்தில் (Dare Devil Movie) அஜித் நடித்துவரும் நிலையில், இதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Director Adhik Ravichandran) இயக்கிவருகிறார். சினிமாவிலிருந்து பல ஆண்டுகளாக விலகியிருந்த நடிகை ஷாலினி அஜித் குமார்.

தற்போது டேர் டெவில் படத்தின் தயாரிப்பாளாராக மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தனது கணவர் அஜித் குமாருடன், ஷாலினி காரில் பயணம் செய்வது தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அனைத்தையும் ரசித்துப் பார்ப்பேன்.. திரைப்படங்கள் குறித்து சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்!

அஜித்துடன் காரில் பயணம் செய்தும் வீடியோவை பகிர்ந்த நடிகை ஷாலினி:

இந்த வீடியோ பதிவின் கீழ் நடிகை ஷாலினி அஜித் குமார் “இசை, காதல் மற்றும் ஒரு நீண்ட பயணம்” என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் அஜித் குமார் கார் ஓட்டும் நிலையில், அவரின் அருகே அமர்ந்து நடிகை ஷாலினி அஜித் குமார் இந்த வீடியோவை எடுத்துள்ளார். நடிகர் அஜித்தின் நடிப்பில் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடந்துவரும் நிலையில், அந்த படத்திற்கான கதாபாத்திர லுக்கில் அஜித் குமார் இருக்கும்படியாக தெரிகிறது. காதில் கம்மல் அணிந்து, வெள்ளை முடியுடன் கேங்ஸ்டர் மாதிரியாக அஜித் இந்த வீடியோவில் தெரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் நிலை என்ன?:

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குமாரின் டேர் டெவில் படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகை ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன், பிரபு, ராதிகா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துவருகிறார்கள்.

இதையும் படிங்க: ட்ரெயினில் ப்ரோமோஷன்.. அப்பா குட்டி படத்திற்காக வித்தியாசமான ப்ரோமோஷனில் இறங்கிய விஜய் ஆண்டனி!

இந்த படத்தை ஷாலினி தயாரித்துவரும் நிலையில், அனிருத் இசையமைத்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் சிறப்பாக நடந்துவருகிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்பே தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறதாம். மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கை கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுவருகிறது என கூறப்படுகிறது.

Follow Us