AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காதலி மீது ஏற்பட்ட சந்தேகம்! வீடு புகுந்து கத்தியால் குத்தி கொன்ற காதலன்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!

Thoothukudi School Girl Murder : தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் வீடு புகுந்து பள்ளி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் தன்னை தானே குத்திக் கொண்ட சம்பவம் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது .

காதலி மீது ஏற்பட்ட சந்தேகம்! வீடு புகுந்து கத்தியால் குத்தி கொன்ற காதலன்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!
முத்துராஜ்- பள்ளி மாணவி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Nov 2026 19:08 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சந்தேகத்தில் பிளஸ் 1 மாணவியை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள செபத்தையாபுரம் சோலையூர் பகுதியை சேர்ந்தவர் காசிபாண்டியன். இவரது மகன் முத்துராஜா. இவர், அந்தப் பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், அந்தப் பகுதியில் வசித்து வந்த 16 வயது மாணவி செபத்தையாபுரம் முத்துமாலை அம்மன் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியும், முத்து ராஜாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில், மாணவியின் படிப்பு முடிந்த பின்னர் திருமணம் குறித்து பேசலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வீடு புகுந்து மாணவியை குத்தி கொன்ற காதலன்

இந்த நிலையில், அந்த மாணவி வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த முத்துராஜா, அந்த மாணவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று சனிக்கிழமை ( நவம்பர் 21-ஆம் தேதி) பள்ளி விடுமுறை என்பதால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்த முத்துராஜா அவரது வீட்டுக்கு சென்று மாணவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த கத்தியால் மாணவியே கொடூரமான முறையில் சரமாரியாக குத்தினார்.

மேலும் படிக்க: ஆம்மாடியோவ் பெரம்பூரில் அதிர்ச்சி! இளைஞர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய ஊழியர்.. அம்மா உணவகத்தில் நடந்த கூத்து!

தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட இளைஞர்

அத்துடன், முத்துராஜா தனது உடலிலும் கத்தியால் குத்திக்கொண்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த அந்தப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். முத்துராஜா பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியின் சடலம் உடல் கூராய்வு மேற்கொள்வதற்காக செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை

காதல் விவகாரத்தில் காதலி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை வீடு புகுந்து காதலன் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் ஏரல் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: நேருக்கு நேர் வந்த 2 இரு சக்கர வாகனங்கள்.. ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.. திருப்பூரில் அடுத்தடுத்து பலியான இருவர்!

Follow Us