AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நேருக்கு நேர் வந்த 2 இரு சக்கர வாகனங்கள்.. ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.. திருப்பூரில் அடுத்தடுத்து பலியான இருவர்!

Tiruppur Road Accident 2 Killed : திருப்பூர் மாவட்டத்தில் இரு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு வர் பரிதாபமாக உயிரிழந்தனர் . இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

நேருக்கு நேர் வந்த 2 இரு சக்கர வாகனங்கள்.. ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.. திருப்பூரில் அடுத்தடுத்து பலியான இருவர்!
விபத்தில் உயிரிழந்த இருவர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Nov 2026 18:17 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் அமைந்துள்ள சாலையில் இரு சக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே சாலையில் எதிர்புறம் வந்த இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 இரு சக்கர வாகனங்களையும் ஓட்டி வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இதனை, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்த நிலையில், அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

விபத்தில் அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு

அத்துடன், இந்த விபத்து தொடர்பாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர்களுக்கும் தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களது சடலம் உடல் கூராய்வு மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.

மேலும் படிக்க: ஆம்மாடியோவ் பெரம்பூரில் அதிர்ச்சி! இளைஞர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய ஊழியர்.. அம்மா உணவகத்தில் நடந்த கூத்து!

விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம்

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், உயிரிழந்தவர்கள் பாலாஜி ( 20 வயது), சுந்தரம் ( 50 வயது) என்பது தெரியவந்தது. அத்துடன், சம்பவத்தில் விபத்தில் சிக்கி சேதமடைந்த 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் சிசிடிவி காட்சிகள்

இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் விபத்து தொடர்பான காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு இரு சக்கர வாகனம் எதிர் திசையில் வருவதும், மற்றொரு பைக் அதிவேகமாக வந்து மோதிய அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

மேலும் படிக்க: அமைச்சரை கையை நீட்டி எச்சரித்தது ஏன்? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு விளக்கம்!

Follow Us