AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாய்ஜாலத்தை விஜய் நிறுத்துக! தவெக ஆட்சி தானாகவே கவிழும்.. அதிமுக கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை.. எடப்பாடி பழனிசாமி!

Edappadi Palaniswami Latest Pressmeet : தமிழக வெற்றிக் கழக ஆட்சி தானாகவே கவிழும், அதனை அதிமுக கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வாய்ஜாலத்தை விஜய் நிறுத்துக! தவெக ஆட்சி தானாகவே கவிழும்.. அதிமுக கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை.. எடப்பாடி பழனிசாமி!
முதல்வர் விஜய்- எடப்பாடி பழனிசாமி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Nov 2026 17:09 PM IST

தவெக ஆட்சி தானாகவே கவிழும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அத்துடன் சட்டம் -ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே போதைப் பொருட்கள் தயாரிக்கும் அளவுக்கு நிலைமை படு மோசமாக உள்ளது. பல்வேறு எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக பேசும்போதெல்லாம் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வாய் திறக்கவில்லை. தொழில் முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்கும் சக்தி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கிடையாது. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை நாளன்று தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு அளித்துள்ளது.

செஞ்சி சிறுமி விவகாரத்தில் முதல்வர் வாய்திறக்கவில்லை

இந்த விவகாரத்தில் மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் ஆகியோரின் இரு கருத்துக்களையும், வாதங்களையும் கேட்ட பின்னர் தான் உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை அளித்துள்ளது. இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளிவந்த பின்னர் தான் கருத்துக்களை தெரிவிக்க முடியும். தமிழகத்தில் போதைப்பொருட்களை தடுப்போம் என்று வாய்சாலம் பேசாமல் தமிழக வெற்றிக் கழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி சிறுமி காணாமல் போய் 40 நாட்கள் கடந்துள்ளது. இந்த வழக்கில் தற்போது வரை போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தற்போது வரை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பேசாமல் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க: அமைச்சரை கையை நீட்டி எச்சரித்தது ஏன்? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு விளக்கம்!

தவெக ஆட்சி தானாகவே கவிழும்

அதிமுகவிடம் 41 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, குறைவான எம்எல்ஏகளை வைத்துக் கொண்டு எப்படி தமிழக வெற்றுக் கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க முடியும். தவெக அரசு மீது தமிழக மக்களுக்கு முன்பு இருந்த கண்ணோட்டம் மாறி வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தவெக ஆட்சி தானாகவே கவிழும். அதனை அதிமுக கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்தது முதல் தற்போது வரை என்ன திட்டங்கள் கொண்டு வந்துள்ளனர். இதனால், தமிழக மக்கள் என்ன நன்மை பெற்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கே தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார்.

போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்

இது நியாயமா. தமிழகத்தில் பொருட்கள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. தலைநகர் சென்னையில் ரூ. 700 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயினை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். அப்படி என்றால், தமிழக காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. தமிழக உளவுத்துறை பிரிவு என்ன செய்து வருகிறது. போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் குற்றங்கள் குறையும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஆம்மாடியோவ் பெரம்பூரில் அதிர்ச்சி! இளைஞர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய ஊழியர்.. அம்மா உணவகத்தில் நடந்த கூத்து!

Follow Us