AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் டிடிஎஃப் வாசனை கோபபட வைக்க நினைத்தது என்ன காரணத்திற்காக? முனியம்மாவை கேள்விகளால் துளைத்தெடுக்கும் விஜய் சேதுபதி!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதி வாரம் முழுவதும் நடைப்பெற்ற நிகழ்வுகள் குறித்து பேசுகிறார். அதிலும் குறிப்பாக முனியம்மாள் நடந்துகொண்ட விதம் குறித்து அவரிடையே தொடர்ந்து கேள்விகளாக கேட்கும் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸில் டிடிஎஃப் வாசனை கோபபட வைக்க நினைத்தது என்ன காரணத்திற்காக? முனியம்மாவை கேள்விகளால் துளைத்தெடுக்கும் விஜய் சேதுபதி!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2026 17:32 PM IST

தமிழ் சின்னத்திரையில் தற்போது ஒளிபரப்பாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10). இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து விறுவிறுப்பாக சென்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த சீசனில் பொதுமக்களுக்காக காமென் மேன் நிகழ்ச்சி நடத்தில் அதில் இருந்து 5 பேர் போட்டியாளர்களாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதன்படி இந்த நிகழ்ச்சியில் காமென் மேனாக கலந்துகொண்ட முனியம்மாள் நிகழ்ச்சி முழுவதும் மிகவும் வன்மத்துடன் விளையாடி வருகிறார். அவரது விளையாட்டு நன்றாக இல்லை என்று ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி இந்த முனியமாள் இந்த 11-வது வாரம் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே அதிக அளவில் சண்டை போட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக டிடிஎஃப் வாசனிடம் அதிக அளவில் கோபத்தை தூண்டும் விதமாக முனியம்மாள் நடந்துகொண்டார். இது பார்வையாளர்களிடையே எரிச்சலை மூட்டியது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் முனியம்மாவை கேள்விகளால் துளைத்தெடுக்கும் விஜய் சேதுபதி:

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று வார இறுதியில் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை பேசுகிறார். அதில் முனியம்மாள் டிடிஎஃப் வாசனிடம் எப்படி நடந்துகொண்டார் என்பது குறித்து பல கேள்விகளை எழுப்புகிறார். அப்போதும் விஜய் சேதுபதி கேட்கும் கேள்விகளை சுற்றிவிடும் வகையிலேயே முனியம்மாள் பேசுகிறார். இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… Sreeleela: ஒரு கனவு நனவானது போல… ரஜினியுடன் தர்மன் படத்தில் பணியாற்றுவது பற்றி பேசிய ஸ்ரீலீலா!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ‘செஃப் ஆக ஆசைப்பட்டேன்… ஒரு விபத்தைப் போல நடந்தது….’ – நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் தனுஷ்

Follow Us