ஃபினாலே வாரப் போட்டியில் மற்றொரு டாஸ்க்.. அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்கள் – ப்ரோமோ இதோ!
Bigg Boss Ticket to Finale Task: தமிழ் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது விறுவிறுப்பாக டிக்கெட் டூ ஃபினாலேகான போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்நிலையில் தினந்தோறும் வெவ்வேறு டாஸ்குகள் கொடுக்கப்பட்ட நிலையில், இன்று (19/11/2026) நடந்த காண்ட்ராக்ட் கில்லாடி டாஸ்க் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் சில வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி நிறைவடைய உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சி (Vijay Tv) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது. தற்போது 10 வாரங்களை கடந்து 11வது வாரத்தின் முடிவில் இந்த நிகழ்ச்சியானது உள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே, டிக்கெட் டூ ஃபினாலே-கான டாஸ்குகள் நடந்துவருகிறது.
தினம் தினம் புது புது டாஸ்குகள் கொடுக்கப்பட்டுவந்த நிலையில், இந்த நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக இருந்தது. அந்த வகையில் இன்று (19/11/2026) வெளியான 3வது ப்ரோமோவில் புதிய டாஸ் குறித்து காட்டப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்குக்கு “காண்ட்ராக்ட் கில்லாடி” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: மகள் ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை குறித்து பரவும் வதந்தி… நடிகர் அர்ஜுன் கொடுத்த விளக்கம்!
டிக்கெட் டூ ஃபினாலேவில் காண்ட்ராக்ட் கில்லாடி டாஸ்க்:
இந்த ப்ரோமோவில், இன்றைக்கான புது டாஸ்காக காண்ட்ராக்ட் கில்லாடி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சக போட்டியாளர்கள், தனக்கென ஒரு காண்ட்ராக்ட் போட்டியாளரை நியமிக்கவேண்டும். அந்த காண்ட்ராக்ட் போட்டியாளரிடம், இந்தத் போட்டியாளரை வெளியேற்ற நினைக்கிறோமோ அவர்களை சுடவேண்டும். அந்த விதத்தில் டிடிஃஎப் வாசன், தன்யாவை நியமித்திருந்தார்.
இதையும் படிங்க: பிக்பாஸில் லக்ஷ்மி பிரியாவிற்கு ஆதரவு குரல் கொடுத்த டிடிஎஃப் – எதிர்க்கும் போட்டியாளர்கள்… வைரலாகும் வீடியோ
வினோத் பாபு அடாவடி அன்சரை நியமித்திருந்தார். அந்த விதத்தில், டார்கெட் செய்யப்பட்டு மொத்தமாக 3 போட்டியாளர்கள் இந்த டாஸ்கிலிருந்து வெளியேறியுள்ளனர். முகேஷ், அடாவடி அன்சர் மற்றும் ஜேசன் என மூவரும் வெளியேறியுள்ளதாக இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 74வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day74 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/VYhEfQQlSp
— Vijay Television (@vijaytelevision) November 19, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தற்போது 11வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்த வாரம் தொடக்கத்திலிருந்தே டிக்கெட் டூ ஃபினாலே போட்டிக்கான டாஸ்குகள் நடந்துவருகிறது. அந்த விதத்தில் இந்த வாரமானது விறுவிறுப்பாக இருந்துவருகிறது. அந்த விதத்தில் இந்த டிக்கெட்டூ ஃபினாலே டாஸ்கை எந்த போட்டியாளர் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மேலும் இந்த வாரத்திலும் எவிக்ஷன் இருக்கும் நிலையில், எந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என உறுதியாக தெரியவில்லை.