AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நா அது ப்ராங்க் கால்னு நினச்சேன்… நடிகை ஸ்ரீலீலா சொன்ன சுவாரஸ்யமான விசயம்!

Actress Sreeleela talks about OM movie | தென்னிந்திய மொழிகளில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீலீலா. இவரது நடிப்பில் தமிழ் மொழியில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படம் குறித்து நடிகை ஸ்ரீலீலா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நா அது ப்ராங்க் கால்னு நினச்சேன்… நடிகை ஸ்ரீலீலா சொன்ன சுவாரஸ்யமான விசயம்!
ஓ.எம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Nov 2026 15:07 PM IST

தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே தற்போது அதிக அளவில் வரவேற்பைப் பெறும் நாயகியாக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீலீலா. இவர் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் நாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். நாயகியாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்திலேயே தெலுங்கு சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா (Actress Sreeleela) நடிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கு மொழியில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீலீலா தமிழ் மொழியில் இந்த 2026-ம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து தமிழ் மொழியில் வெளியான படம் பராசக்தி.

இந்தப் படத்தின் மூலமாக அவர் தமிழ் மொழியில் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் நாளை நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ள ஓம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நா அது ப்ராங்க் கால்னு நினச்சேன்… நடிகை ஸ்ரீலீலா:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீலீலா அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் கூறியதாவது, தனுஷ் அவர்களின் அலுவலகத்திலிருந்து எனக்கு முதல் அழைப்பு வந்தது. ஆரம்பத்தில், இது யாரோ செய்யும் குறும்பு என்று நினைத்தேன். மீண்டும் அவர்கள் அழைத்தபோது, ​​எனக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு, நான் தனுஷ் அவர்களை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். தனுஷ் அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என் அம்மாவே பதில் அளித்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவர், இவருக்குப் பேசுவதற்கு வாய் இல்லையா? என்று கேட்டார்.

அந்தச் சமயத்தில், தனுஷ் அவர்களின் ‘கொடி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. அவர் இயக்கும் ஒரு படத்தில் இருந்த இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. ‘லுக் டெஸ்ட்’ (look test) ஒன்றில் கலந்துகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர், ஆனால் அப்போது நான் அதற்குத் தயாராக இல்லை. எனக்கு 16 வயது இருந்தபோதுதான் இவை அனைத்தும் நடந்தன என்று தெரிவித்துள்ளார்.

Also Read… ஹபீபி படத்தை பாராட்டி பேசிய நடிகர் மம்முட்டி…. இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Arivu Movie: அறம் செய்ய விரும்பு… உறியடி விஜய் குமாரின் அறிவு பட டீசர் வெளியீடு!

Follow Us