வெறும் ரூ.1-க்கு சிம்.. டேட்டா, வாய்ஸ் கால் எல்லாமே இருக்கு.. பிஎஸ்என்எல் நிறுவனம் அசத்தல்!
Get BSNL SIM for 1 Rupees | இந்தியாவில் உள்ள பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பிஎஸ்என்எல் தற்போது வெறும் ரூ.1-க்கு சிம் கார்டு அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்திய பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய பொருட்களில் ஒன்றாக ஸ்மார்ட்போன்கள் (Smartphone) உள்ளன. அந்த ஸ்மார்ட்போன்களை தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு இணைய வசதி கட்டாயம் தேவைப்படும். எனவே தான், இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தான், பிஎஸ்என்எல் (BSNL – Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் மிக அட்டகாசமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, வெறும் ரூ.1-க்கு சிம் கார்டை வழங்குகிறது.
இந்த சிம் கார்டு மட்டுமன்றி அதற்கு தினசரி டேட்டா, போன் கால் வசதி ஆகியவற்றையும் பிஎஸ்என்எல் வழங்கியுள்ளது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சிம் கார்டு குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
ஃப்ரீடம் 2.0 திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல் நிறுவனம்
இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில், பிஎஸ்என்எல் அசத்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, ஃப்ரீடம் 2.0 (Freedom 2.0) என்ற திட்டத்தை அது அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை வெறும் ரூ.1-க்கு பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் வெறும் ரூ.1 செலுத்தி வாடிக்கையாளர்கள் புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டை அறிமுகம் செய்துள்ளது. முன்பு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஜியோ நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. அந்த வரிசையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்துள்ளது.




இதையும் படிங்க : திடீரென மறையும் போட்டோ, வீடியோ! வாட்ஸ் அப் கொண்டுவரவுள்ள புது ஆப்ஷன்.. என்ன அது?
வெறும் ரூ.1-க்கு சிம் கார்டு – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் ரூ.1-க்கு இந்த சிம் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் சிம் கார்டு வழங்குவது மட்டுமன்றி, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி, தினமும் 1 ஜிபி அதிவேக டேட்டா, மற்றும் தினமும் சுமார் 100 இலவச குறுஞ்செய்திகள் என பல்வேறு அட்டகாசமான சேவைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த சிம் கார்டு மூலம் வழங்குகிறது. இந்த சலுகையை 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : வெறும் ரூ.51 மட்டுமே.. ஒரு மாத ரீசார்ஜ் இலவசம்.. பிஎஸ்என்எல் வழங்கும் அதிரடி ஆஃபர்
24 நாட்கள் வேலிடிட்டி
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சேவைகளையும் இந்த சிம் கார்டில் 24 நாட்கள் வரை பெறலாம். அதன் பிறகு, வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை தேர்வு செய்து ரீச்சார்ஜ் செய்துக்கொள்ளலாம்.