AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றால் இன்கம்மிங் கால் வராது.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த ஜியோ!

Jio New Recharge Rules | இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஜியோ தனது பயனர்காளுக்கு அதிர்ச்சி அளிக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பயனர்கள் ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றால் அவர்களாக் இன்கம்மிங் கால்களை பெற முடியாது என கூறியுள்ளது.

ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றால் இன்கம்மிங் கால் வராது.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த ஜியோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Nov 2026 02:49 AM IST

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் (Telecom Companies) ஒன்றாக உள்ளது தான் ஜியோ (Jio). இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ரீச்சார்ஜ் திட்டங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை ஜியோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தான், தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றால் இன்கம்மிங் கால் வராது

இந்தியாவில் ஏர்டெல் (Airtel), வோடாபோன் (Vodafone), ஜியோ என பல டெலிகாம் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் முதன்மையாக உள்ளதுதான் ஜியோ. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரீச்சார்ஜ் திட்டங்கள் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தான் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : வீட்டிலிருந்தே காற்றின் தரக் குறியீட்டை தெரிந்துகொள்ளலாம் – எப்படி தெரியுமா?

சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் வாடிக்கையாளர்கள்

ஜியோ நிறுவனம் தனது ரீச்சார்ஜ் திட்டம் குறித்த வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்திகள் குறித்து வாடிக்கையாளர்கள் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதாவது, ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றால் இன்கம்மிங் கால்களை பெற முடியாது என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : டேட்டா இல்லாத புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த BSNL.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

ரீச்சார்ஜ் திட்டம் நிறைவடைந்தால் என்ன நடக்கும்?

வழக்கமாக ஒருவர் மற்றொருவரை தொடர்புக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ரீச்சார்ஜ் திட்டம் கட்டாயம் ஆகும். ரீச்சார்ஜ் திட்டம் நிறைவடைந்துவிட்டால் ஒருவர் மற்றொருவரை தொடர்புக்கொள்ள முடியாது. இந்த நிலையில், ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்கள் அல்லது ரீச்சார்ஜ் செய்ய வேண்டாம் என நினைக்கும் நபர்கள் தொடர்ந்து போன் அழைப்புகளை பெறுவர். ஆனால், தற்போது நிலமை தலைகீழாக உள்ளது. அதாவது, இனி ரீச்சார்ஜ் திட்டங்கள் நிறைவடைந்தால் பயனர்களால் போன் அழைப்புகளை பெற முடியாது.

ஜியோ நிறுவனம் எடுத்த முக்கிய முடிவு

அதாவது, இனி ஜியோ பயனர்களுக்கு தங்களது ரீச்சார்ஜ் திட்டங்கள் நிறைவடைந்தால் அவர்களால் தொடர்ந்து போன் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை  பெற்றுக்கொள்ள முடியாது. சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா இல்லாத ரீச்சார்ஜ் திட்டங்களை வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஜியோ நிறுவனம் இந்த முடிவை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us