நடிகர் வைபவ் நடிப்பில் வெளியானது மணிகண்டா படத்தின் டீசர்!
Manikanda Movie Teaser Out Now | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் வைபவ். இவர் கதையின் நாயகனாக தற்போது நடித்து உள்ள படம் மணிகண்டா. இந்தப் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்க்கும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் வைபவ் (Actor Vaibhav). இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வந்தாலும் தனது சினிமா வாழ்க்கையை தெலுங்கு சினிமாவில்தான் தொடங்கினார். அதன்படி கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான கோடவா என்ற படத்தின் மூலமாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சரோஜா என்ற படத்தின் மூலமாக இவர் தமிழ் மொழியில் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முக்கியமான வேடங்களில் நடித்து வந்த இவர் பிறகு தமிழ் மொழியில் அதிக அளவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
அதன்படி நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படம் சென்னை கேங்ஸ்டர்ஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் வைபவ்.




நடிகர் வைபவ் நடிப்பில் வெளியானது மணிகண்டா படத்தின் டீசர்:
இந்த நிலையில் நடிகர் வைபவ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் மணிகண்டா. இந்தப் படத்தினை இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் எழுதி இயக்கி உள்ளர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் வைபவ் உடன் இணைந்து நடிகர்கள் ஆடுகளம் நரேன், அரவிந்த் ஆகாஷ், மீனாட்சி கோவிந்தராஜன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பிரேம்ஜி இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர். அது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… ரிலீஸிற்கு மூன்று நாட்களே உள்ள ஓ.எம் படம்… புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#ManikandaTeaser is out NOW 💥
Unna Indha madhri paaka romba perumaya irukku @actor_vaibhav 👏🏽
Mythological crime drama loading 🔥
#MANIKANDA #LORDAYYAPPAFILM
@Tantrafilmsind
@MeenakshiGovin2 @aravindaakash @JKSaravana @directorvizy
@Premgiamaren @Cinemainmygenes
@yuvan_selva @imSuryaRajeevan
@shateshkumar @aditangirala
@teamaimpr @cinemapayyan— venkat prabhu (@vp_offl) November 17, 2026
Also Read… ஜி.வி.பிரகாஷ் – மாளவிகா மனோஜ் நடிக்கும் புது படத்தின் டைட்டில் இதுதான் – வெளியான ஃபர்ஸ்ட் லுக்ஸ்!