AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜி.வி.பிரகாஷ் – மாளவிகா மனோஜ் நடிக்கும் புது படத்தின் டைட்டில் இதுதான் – வெளியான ஃபர்ஸ்ட் லுக்ஸ்!

Anbhudan Mahi Movie First Look: தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் இசையமைப்பாளராக மிகவும் பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் ஜோ பட இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துவந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் முதல் பார்வை வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜி.வி.பிரகாஷ் – மாளவிகா மனோஜ் நடிக்கும் புது படத்தின் டைட்டில் இதுதான் – வெளியான ஃபர்ஸ்ட் லுக்ஸ்!
ஜிவி பிரகாஷ் மற்றும் மாளவிகா மனோஜ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Nov 2026 14:53 PM IST

இசையமைப்பாளராக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து, தேசிய விருதை வென்று பிரபலமானவராக இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar). இவர் சினிமாவில் வெறும் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், படங்களில் ஹீரோவாகவும் நடித்துவருகிறார். இவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களை ஹீரோவாக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 25 திரைப்படங்களுக்கும் மேல் தமிழில் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் இம்மார்ட்டல் (Immortal Movie). அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு இவர், ஜோ திரைப்பட (Joe Movie) இயக்குநர் ஹரிஹரன் ராம் (Director Hariharan Ram) இயக்கத்தில் புதிய படத்தில் இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படம் கிரிக்கெட் மற்றும் காதல் என பீல் குட் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்பட்டிருந்தது. அந்த விதத்தில் தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகி உள்ள ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

ஜி.வி. பிரகாஷ் – மாளவிகா மனோஜ் கூட்டணி பட டைட்டில்:

இந்த திரைப்படத்தின் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரராக நடித்துள்ளாராம். அவருக்கு ஜோடியாக இஸ்லாம் பெண்ணாக நடிகை மாளவிகா மனோஜ் நடித்துள்ளாராம். இப்படம் கல்லூரி காதல் மற்றும் கிரிக்கெட் தொடர்பான படமாக உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் இப்படத்திற்கு பாக்குழு, “அன்புடன் மகி” (Anbhudan Mahi) என டைட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை குறித்த போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

அன்புடன் மகி திரைப்படத்தின் முதல் பார்வை குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த திரைப்படத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் மாளவிகா மனோஜ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதை இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்க, லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனமானது இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறாராம்.

இதையும் படிங்க: மால டும் டும்.. மஞ்சன டும் டும்… நடிகை மிருணாளினி ரவியின் Wedding clicks!

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இணை தயாரிப்பாளராக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இப்படம் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.

Follow Us