Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GV.Prakash: செல்வராகவனின் ‘மெண்டல் மனதில்’ திரைப்படத்தின் நிலை என்ன? அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!

GV.Prakashs Mental Manadhil: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் மற்றும் நடிகராகவும் இருந்து வருபவர் செல்வராகவன். இவர் தற்போது திரைப்படங்களை இயக்குவதில் மும்முரமாக உள்ளார். அந்த வகையில், ஜி.வி.பிரகாஷின் முன்னணி நடிப்பில் இவர் இயக்கிவரும் படம்தான் மெண்டல் மனதில். தற்போது இப்படத்தை பற்றி ஜி.வி.பிரகாஷ் குமார் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

GV.Prakash: செல்வராகவனின் ‘மெண்டல் மனதில்’ திரைப்படத்தின் நிலை என்ன? அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!
ஜி.வி. பிரகாஷ்குமார் மற்றும் செல்வராகவன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 09 Oct 2025 16:24 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார் (G.V. Prakash Kumar). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பிளாக்மெயில் (Black Mail). இயக்குநர் மு.மாறன் (Mu. Maran) இயக்கத்தில் கடந்த 2025ம் செப்டம்பர் 12ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷ்ன் மற்றும் க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 4 படங்களை தனது கைவசம் வைத்திருகிறார் ஜி.வி. பிரகாஷ் . மேலும் இவர் சமீபத்தில் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேலும் இவர் மற்றும் செல்வராகவன் (Selvaraghavan) கூட்டணியில் உருவாகிவரும் படம்தான் மெண்டல் மனதில் (Mental Manadhil). இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஜனவரி மாதத்தின் இறுதியில் தொடங்கிய நிலையில், தற்போது இப்படத்தை குறித்த அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லைஃப்ல நீ ஒரு விசயத்த லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணா… டியூட் படத்தின் ட்ரெய்லர் இதோ!

மெண்டல் மனதில் திரைப்படத்தை குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட பதிவு :

இந்த பதிவில் ஜி.வி. பிரகாஷ் குமார், “இந்த மெண்டல் மனதில் திரைப்படத்தின் 4வது கட்ட ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கிவருகிறார். இந்த படத்தில் பாடல்கள் ஆல்பத்திற்காக காத்திருங்கள்.

இதையும் படிங்க: இந்த தீபாவளி இளைஞர்களின் தீபாவளி… துருவ் விக்ரம், பிரதீப் ரங்கநாதன் படங்களும் வெற்றியடைய வேண்டும் – ஹரிஷ் கல்யாண்

இது ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தில் ஆல்பத்திற்கு பிறகு, இந்த மெண்டல் மனதில் படத்தின் ஆல்பங்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்” என மெண்டல் மனதில் படத்தின் ஷூட்டிங் மற்றும் பாடல்கள் குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.

மெண்டல் மனதில் திரைப்படம் :

இந்த மெண்டல் மனதில் திரைப்படத்தை செல்வராகவன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னணி ஹீரோவாக நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் சிவகுமாரின் சபதம் மற்றும் பூமிகா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிபிடகக்கத்து.

இந்த படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார்தான் இசையமைத்து வருகிறார். இந்த படமானது, செல்வராகவனின் மயக்கம் என்ன படத்திற்கு பின் வெளியாகும் ஒரு ரொமாண்டிக் காதல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகிவருவதாக கூறப்படுகிறது. இப்படம் இந்த 2025 இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.