Texla: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் டெக்ஸ்லா படத்தில் நடிக்கும் ஜெய்.. பூஜைகளுடன் தொடங்கிய ஷூட்டிங்!
Texla Movie Shooting Pooja: தமிழில் பிரபல பெண் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவரின் இயக்கத்தில் டெக்ஸ்லா என்ற புது படமானது தயாராகிவரும் நிலையில், இதில் நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று (06/03/2026) பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) மகளும், பிரபல பெண் இயக்குநராக இருந்துவருபவர்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Aishwarya Rajinikanth.). இவரின் இயக்கத்தில் இறுதியாக லால் சலாம் (Lal Salaam) என்றார் திரைப்படமானது வெளியாகியிருந்தது. இதில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், அவருடன் நடிகர்கள் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தின் மூலமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு பல விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் இதையடுத்து தற்போது இவரின் இயக்கத்தில் புது படம் உருவாக்கவுள்ளது. இதை கண்ணன் ரவி குரூப்ஸ் (Kannan Ravi Groups) நிறுவனம் தயாரிக்கும் நிலையில், படத்திற்கு “டெக்ஸ்லா” (Texla) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இன்று 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதியில், டெக்ஸ்லா படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் அனிருத் (Anirudh), ஜெய் (Jay), சுராஜ் வெஞ்சாரமூடு (Suraj Venjaramoodu), அனந்தராஜ், லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர்.




இதையும் படிங்க: பணம் கொடுக்கும் நவீன மிஷின்.. வெளியானது அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ பட டைட்டில் டீசர்!
டெக்ஸ்லா படத்தின் ஷூட்டிங் பூஜை குறித்து வைரலாகும் பதிவு:
Pooja ceremony of #Texla✨
Starring Jai & SurajVenjaramoodu🌟
Directed by AiswaryaRajinikanth & Produced by Kannan Ravi 🎬
Yuvan Shankar Raja Musical 🎶 pic.twitter.com/JJPI5RAxda— AmuthaBharathi (@CinemaWithAB) March 6, 2026
டெக்ஸ்லா படத்தின் நடிகர்கள் லிஸ்ட்:
இந்த டெக்ஸ்லா படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள நிலையில், நடுத்தர பட்ஜெட் படமாக தயாராகவுள்ளதாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கவுள்ள நிலையில், மிக முக்கிய வேடத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்கவுள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் ஆனந்தராஜ், ஜார்ஜ் மரியான் போன்ற நடிகர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: ‘சித்தப்பு சிக்குன்னு சிக்குன்னு வாராலே’… சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’ வீடியோ பாடல் வெளியீடு!
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இன்று 2026 மார்ச் 6ம் தேதியில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் முழுமையாக இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிடும் என கூறப்படும் நிலையில், வரும் 2027ம் ஆண்டில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். தற்போது இந்த பட ஷூட்டிங் கி பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.