AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் இயக்குநராக புது படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

Aishwarya Rajinikanths Comeback: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இறுதியக லால் சலாம் என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில், 2 வருடத்திற்கு பின் மீண்டும் இயக்குநராக படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் இயக்குநராக புது படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புது திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 26 Feb 2026 19:01 PM IST

தமிழில் பிரபலமான இயக்குநர்கள் வரிசையில் இருந்துவருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Aishwarya Rajinikanth). இவர் தமிழில் இறுதியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை (Superstar Rajinikanth) வைத்து “லால் சலாம்” (Lal Salaam) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திலும் ரஜினிகாந்துடன் நடிகர்கள் விஷ்ணு விஷால் (Vishnu Vishal), விக்ராந்த் (Vikranth) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முஸ்லீமாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இப்படம் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தை அடுத்தாக வேட்டையன் (Vettaiyan) மற்றும் கூலி (Coolie) போன்ற படங்கள் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகவில்லை.

லால் சலாம் படமானது வசூல் ரீதியாக பெரும் தோல்வியடைந்த நிலையில், 1 ஆண்டிற்கு மேலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எந்த படங்களையும் இயக்கவில்லை. இந்நிலையில் தற்போது இயக்குநராக புது படத்தில் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ‘பெடி’ படத்தின் 2வது பாடல் ரிலீஸ் எப்போது? – ராம் சரண் கொடுத்த அப்டேட் இதோ!

இயக்குநராக புது திரைப்படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்திற்கு பின் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குநராக படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் இவர் இயக்கும் புது திரைப்படத்தை தலைவர் தம்பி தலைமையில் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்த கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் கீழ், தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளாராம். இந்த படமானது கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள 9வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புது திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது மீண்டும் இயக்குநராக படம் இயக்கும் நிலையில், இதன் அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் இந்த புது திரைப்படத்தின் ஹீரோ, நடிகை மற்றும் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகும் நிலையில், யார் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என மக்களிடையே எதிர்பார்ப்புகள் எழுந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழில் எந்த நடிகையும் என்னுடன் நடிக்க ரெடியாக இல்ல – வெளிப்படையாக பேசிய கென் கருணாஸ்!

இது குறிதான அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தை படக்குழு வரும் 2027ம் ஆண்டிற்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் இப்படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கிறார் என்று. விரைவில் இது பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us