AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Peddi Movie: ‘பெடி’ படத்தின் 2வது பாடல் ரிலீஸ் எப்போது? – ராம் சரண் கொடுத்த அப்டேட் இதோ!

Peddi 2nd Song Release Date: தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக நடித்து பான் இந்திய ரசிகர்களை கவர்ந்துவருபவர் ராம் சரண். இவரின் நடிப்பில் பெடி திரைப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இதன் முதல் பாடல் வெளியாகி தற்போதுவரையிலும் வைரலாகிவரும் நிலையில், இதன் 2வது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Peddi Movie: ‘பெடி’ படத்தின் 2வது பாடல் ரிலீஸ் எப்போது? – ராம் சரண் கொடுத்த அப்டேட் இதோ!
பெடி திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 26 Feb 2026 17:29 PM IST

நடிகர் ராம் சரண் (Ram Charan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர் (Game changer). இந்த திரைப்படத்தில் ராம் சரண் ரெட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில், அவருடன் நடிகர்கள் கியாரா அத்வானி, சமுத்திரக்கனி மற்றும் அஞ்சலி போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான நிலையில், எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்ததாக தற்போது ராம் சரணின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் பெடி (Peddi). இதை இயக்குநர் புச்சி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கிகியுள்ளார். இவர் ஏற்கனவே ராம் சரணின் ரங்கஸ்தலம் என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில், 2வது முறையாக இவருடன் இணைந்துள்ளார்.

இந்த படமானது கிரிக்கெட் மற்றும் பகை குறித்த கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் (AR. Rahman) இசையமைத்துவரும் நிலையில், முதல் பாடல் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டவது பாடல் ரிலீஸ் எப்போது என்பது குறித்து ராம் சரண் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டான் படத்தின் கதையை கேட்கும்போதே சொன்னேன்… சமுத்திரக்கனியின் சுவாரஸ்ய பேச்சு

பெடி திரைப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் அப்டேட்:

ராம் சரணின் பெடி திரைப்படத்தின் 2வது பாடல் “ரை ரை ரா ரா” என்ற பாடலானது வரும் 2026 மார்ச் 02ம் தேதியில் வெளியிடுவதாக ராம் சரண் அறிவித்துள்ளார். இப்படம் முதலில் மார்ச் 19ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்துடன் தி பாரடைஸ் மற்றும் டாக்சிக் போன்ற படங்கள் வெளியாக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: தொலைதூரத்தில் வெளிச்சம் நீ… 16 ஆண்டுகளை நிறைவு செய்தது விண்ணைத்தாண்டி வருவாயா படம்

பின் பெடி படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாத காரணத்தினால், 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

பெடி திரைப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் குறித்து நடிகர் ராம் சரண் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பெடி திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தின் மூலமாகதான் முதல் முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துவருகிறது.

Follow Us