AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தேனி சிறை கைதிகள் தப்பியோட்டம்.. “நிர்வாக லட்சணத்தை கண்டு ஊரே சிரிக்கிறது!”.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!

EPS Criticizes TVK Govt: தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டத்துறை, மின்சாரத்துறை மற்றும் சிறைத்துறை என அனைத்துத் துறைகளிலும் நிர்வாகத் தோல்வி ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேனி சிறை கைதிகள் தப்பியோட்டம்.. “நிர்வாக லட்சணத்தை கண்டு ஊரே சிரிக்கிறது!”.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Oct 2026 10:47 AM IST

தேனி, அக்.27: தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணை கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டு இரவோடு இரவாகத் தப்பியோடிய சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பானதாகக் கருதப்பட வேண்டிய சிறைச்சாலைக்குள்ளேயே கைதிகள் இவ்வளவு பெரிய திட்டத்துடன் தப்பியோடியிருப்பது சட்டம்-ஒழுங்கின் சீர்கேட்டைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இந்தச் சூழலில், ஆளுங்கட்சியான தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் சுட்டிக்காட்டி பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை மற்றும் விமர்சனங்கள் தற்போது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிக்க: மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பண்டிகைக் காலத்தில் நெய், வெண்ணெய், இனிப்புப் பொருட்களின் விலை கடும் உயர்வு!!

சீரழிந்துவிட்டதாக EPS குற்றச்சாட்டு:

தேனி சிறை தப்பியோட்டச் சம்பவம் குறித்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஏற்கெனவே வழக்கறிஞர் நியமன விவகாரத்தில் அரசுக்கு நீதிமன்றங்களின் மூலம் குட்டுகள் விழுந்து சட்டத்துறை சந்தி சிரித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மின்வெட்டு மற்றும் மின் கொள்முதல் ஊழல்களால் மின்சாரத்துறை ஏற்கனவே பியூஸ் பிடுங்கித் தவிக்கும் நிலையில், தற்போது அந்த ஊழல் மற்றும் நிர்வாகத் தோல்விப் பட்டியலில் சிறைத்துறையும் இணைந்திருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். இந்த முக்கியமான மூன்று துறைகளுக்கும் ஒரே அமைச்சர்தான் பொறுப்பு வகிக்கிறார் என்பதைக் குறிப்பிட்ட அவர், அந்த அமைச்சரின் திறமையின்மை காரணமாகத் துறை ரீதியான சீரழிவுகள் தொடர்வதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஊரே கைதட்டிச் சிரிப்பதாகக் கிண்டல்:

எப்போது பார்த்தாலும் மைக் முன்னால் பேசிக் கொண்டும், எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதிலேயே குறியாகவும் இருக்கும் அமைச்சர் நிர்மல் குமாரின் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைதட்டிச் சிரிப்பதாக எடப்பாடி பழனிசாமி கிண்டலடித்துள்ளார். “தூக்கத்தில் கூட எதிர்க்கட்சிப் புராணம் பாடிக்கொண்டிருக்கும் அமைச்சரின் துறைசார்ந்த செயல்பாடுகள் வெட்கக்கேடானவை” என்று அவர் வர்ணித்துள்ளார். ஏற்கெனவே புழல் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய போதே தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் அரசு பலப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், ஆனால் இந்த அரசுக்கோ அல்லது சம்மந்தப்பட்ட அமைச்சருக்கோ அதற்கெல்லாம் நேரமில்லை போலிருக்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!

புழல் சிறை ஆய்வுகள் ஜோதிட பரிகாரமா?

முன்பு புழல் சிறைக்குச் சென்று ஆய்வு நடத்தியதாகக் கூறப்பட்ட நிகழ்வைக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, \”நீங்கள் நடத்தியது உண்மையான ஆய்வா அல்லது சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிட பரிகாரமா?\” என்று காரமாக கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ச்சியாகச் சிறைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்பட்டு கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் அரங்கேறி வருவது சட்டம்-ஒழுங்கின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தப்பியோடிய கைதிகளை உடனடியாகக் கூண்டோடு கைது செய்வதோடு, அனைத்துச் சிறைகளின் பாதுகாப்பையும் தவெக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us