AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. மேலும் விலை உயருமா?

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்றுன் தங்கம் விலை ரூ.400 உயர்வை சந்தித்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price : தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. மேலும் விலை உயருமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Oct 2026 10:48 AM IST

சென்னை, அக்டோபர் 27 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) மற்றும் வெள்ளி விலை (Silver Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று (அக்டோபர் 27, 2026) மூன்றாவது நாளாக தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் உயர்வை சந்தித்து வரும் தங்கம் விலை

இந்தியாவில் விரைவில் தீபாவளி உள்ளிட்ட அடுத்தடுத்த பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. அதுமட்டுமன்றி, திருமண சீசனும் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்க நகைகளை வாங்க அதிக ஆர்வம் காட்டும் காலமாக இது உள்ளதால் தங்கத்தின் மீதான தேவை அதிகரித்து தங்கம் விலை தொடர் உயர்வை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதன் காரணமாக தான் தற்போது தங்கம் விலை மூன்றாவது நாளாக தொடர் விலை உயர்வை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : மாருதி விக்டோரியாஸ் ஆரம் அறிமுகம்.. விலை மற்றும் மைலேஜ் விவரங்கள் என்னென்ன?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135-க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,329-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,632-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.220-க்கும், ஒரு கிலோ ரூ.2,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : வங்கி கடன் வாங்கியவர்களுக்கு ஷாக்.. மேலும் ரெப்போ வட்டியை உயர்த்த ஆர்பிஐ திட்டம்!

உலக மத்திய வங்கிகள் தங்களின் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வந்ததே கடந்த சில நாட்களாக தங்கம் தொடர் சரிவை சந்திக்க மிகப்பெரிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் தான், அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் தங்கம் விலை மேலும் சரிவை சந்திக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் மட்டுமானால் பண்டிகைகள் காரணமாக விலை சற்று அதிகமாக இருக்கும் என்றும், அது நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us