AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கங்கைகொண்ட சோழபுரத்தில் 100 மூட்டை பச்சரிசியால் அன்னாபிஷேகம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் 100 மூட்டை பச்சரிசியால் அன்னாபிஷேகம்!

Deepan
Deepan | Published: 25 Oct 2026 22:19 PM IST

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு 100 மூட்டை பச்சரிசியால் அன்னாபிஷேக விழா கோலாகலமாகத் தொடங்கியது. மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இக்கோவிலில், இன்று அதிகாலை யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஆறு கொதிகலன்களில் சமைக்கப்பட்ட சாதம் முதலில் மகா கணபதிக்கு படைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க பிரகதீஸ்வரருக்கு சாற்றப்பட்டது.

முன்னதாக, சுவாமி மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. அன்னத்தால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவையொட்டி காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Follow Us