AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
பைக்கிற்குள் பதுங்கிய 6 அடி சாரைப்பாம்பு : இருகூர் பகுதியில் பரபரப்பு

பைக்கிற்குள் பதுங்கிய 6 அடி சாரைப்பாம்பு : இருகூர் பகுதியில் பரபரப்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Oct 2026 13:42 PM IST

கோவை, இருகூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்திற்குள் பதுங்கி இருந்த ராட்சத சாரைப் பாம்பைப் பாம்பு பிடி வீரர் ஒருவர் திறம்பட மீட்டு, அதனை வனப்பகுதியில் பாதுகாப்பாக வெளியனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கோவை, இருகூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஏதோ ஒன்று அசைவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார் அதனை உற்று நோக்கிய போது, அங்கு நீளமான சாரைப்பாம்பு ஒன்று வாகனத்தின் உட்பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனைப் பார்த்து பயம் அடைந்த உரிமையாளர்கள் உடனடியாகச் சுற்றி இருந்தவர்களின் உதவியுடன் பாம்பு பிடி வீரருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர், வாகனத்தின் உள்ளே மறைந்து இருந்த பாம்பைப் பத்திரமாக வெளியே எடுக்கத் திட்டமிட்டார். பாம்பிற்கு எவ்வித காயமும் ஏற்படாத வகையிலும், அது தப்பித்து வேறு இடத்திற்குச் சென்று விடாதவாறும் இருசக்கர வாகனத்தை பாகம் பாகமாகப் பிரித்தார். தொடர்ந்து, தனது அனுபவமிக்க உத்திகளைப் பயன்படுத்தி வாகனத்தின் இடுக்கில் பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை மிகவும் லாபகமாகவும் பத்திரமாகவும் வெளியே எடுத்தார்.

பாம்பு மீட்கப்பட்டதைக் கண்ட பின்னரே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர் பெருமூச்சு விட்டனர். மீட்கப்பட்ட அந்தச் சாரைப் பாம்பைப் பாதுகாப்பான சாக்குப்பையில் அடைத்த பாம்பு பிடி வீரர், பின்னர் அதனை அடர்ந்த வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று பத்திரமாக விடுவித்தார். மழைக்காலம் மற்றும் குளிர்ந்த சூழல் காரணமாகப் பாம்புகள் சூடான எஞ்சின் பகுதிகளைத் தேடி வாகனங்களுக்குள் புகும் வாய்ப்பு உள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Follow Us