உதகை–கோவை அரசு பேருந்து மீது நிலச்சரிவு! பர்லியார் அருகே நள்ளிரவில் விபத்து
நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது, மேட்டுப்பாளையம்–குன்னூர் மலைப்பாதையில் உள்ள பர்லியார் அருகே நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து மண் மற்றும் ராட்சத மரங்கள் பேருந்தின் மீது சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது, மேட்டுப்பாளையம்–குன்னூர் மலைப்பாதையில் உள்ள பர்லியார் அருகே நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து மண் மற்றும் ராட்சத மரங்கள் பேருந்தின் மீது சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மலைப்பாதைகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தின் மீது விழுந்த மரங்கள் மற்றும் மண்ணை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பேருந்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை, அவர்களின் நிலை மற்றும் காயங்கள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
