AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கோழியை விழுங்கிய 12 அடி மலைப்பாம்பு.. போராடிப் பிடித்த வனத்துறையினர்!

கோழியை விழுங்கிய 12 அடி மலைப்பாம்பு.. போராடிப் பிடித்த வனத்துறையினர்!

Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Oct 2026 19:00 PM IST

வேலூர் அருகே விவசாய நிலத்தில் கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் போராடிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலத்தில் கோழியை விழுங்கிய நிலையில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று இருப்பதைப் பார்த்த விவசாயி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்குத் விவசாயி தகவல் தெரிவித்தா

வேலூர் அருகே விவசாய நிலத்தில் கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் போராடிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலத்தில் கோழியை விழுங்கிய நிலையில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று இருப்பதைப் பார்த்த விவசாயி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்குத் விவசாயி தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மலைப்பாம்பைப் பாதுகாப்பாகப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் பிடித்தனர். விவசாய நிலத்தில் இவ்வளவு பெரிய மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் விரைந்து வந்ததன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 12 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமாக காட்சியளித்த மலைப்பாம்பை வனத்துறையிர் போராடி  பிடித்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

Follow Us