கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு! சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றால சூழல் சுற்றுலா இன்று (அக்டோபர் 24) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றால சூழல் சுற்றுலா இன்று (அக்டோபர் 24) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். தொடர் மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டால் ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் மற்றும் நீர்வரத்தின் அளவைக் கண்காணித்து, சூழல் சுற்றுலாவை மீண்டும் திறப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.
