AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
ஏற்காட்டில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. முக்கிய சாலையில் வேரோடு சாய்ந்த ராட்சத மரம்.. போக்குவரத்து பாதிப்பு!!

ஏற்காட்டில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. முக்கிய சாலையில் வேரோடு சாய்ந்த ராட்சத மரம்.. போக்குவரத்து பாதிப்பு!!

Sathis S
Sathis S | Published: 23 Oct 2026 15:05 PM IST

Giant Tree Falls Across Yercaud Road: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் கனமழை காரணமாகச் சேர்வராயன் கோவில் பாதையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் 20-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதோடு, 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அக்டோபர், 23: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாகக் காலநிலை மாற்றத்தின் காரணமாகக் கடும் பனிமூட்டத்துடன் கூடிய கனமழை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. குறிப்பாக இரண்டாவது நாளாக நேற்றும் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக மலைப்பாதைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழும் அபாயகரமான சூழலும் நிலவி வருகிறது. இதனால் மலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வார இறுதி நாட்களைக் கழிக்கத் திரண்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் தீவிரத்தால் நிலச்சரிவு மற்றும் மரங்கள் சாயும் அபாயம் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வேரோடு சாய்ந்த ராட்சத மரம்:

இந்நிலையில், ஏற்காட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான சேர்வராயன் கோவில் செல்லும் பாதையில் உள்ள அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ராட்சத மரம் ஒன்று, தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டு திடீரென வேரோடு சாய்ந்தது. விழுந்த வேகத்தில் அந்த மரம் அங்கே இருந்த உயர் அழுத்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது பலமாக விழுந்ததால், மின்கம்பிகள் உடனடியாக அறுந்து கீழே விழுந்தன. இதன் காரணமாகச் சேர்வராயன் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கான மின் விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டு அப்பகுதிகள் இருளில் மூழ்கின.

Follow Us