AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா.. தஞ்சை பெரிய கோவிலில் 1041 மாணவிகளின் நாட்டியாஞ்சலி!

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா.. தஞ்சை பெரிய கோவிலில் 1041 மாணவிகளின் நாட்டியாஞ்சலி!

Deepan
Deepan | Published: 22 Oct 2026 14:33 PM IST

Raja Raja Chola 1041st Sadaya Vizha Begins: தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா அரசு விழாவாகக் கோலாகலமாகத் தொடங்கியது. இவ்விழாவையொட்டி 1041 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றதுடன், பாரம்பரிய ஊர்வலமும் சிறப்பாக நடத்தப்பட்டது.

தஞ்சை, அக்.22: தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் கலாச்சாரத்திற்கும் உலகளவில் அழியாப் புகழைத் தேடித்தந்த தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னன் அருண்மொழிவர்மன் என்ற ராஜராஜ சோழனின் பிறந்த தினமானது ஆண்டுதோறும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தன்று ‘சதய விழா’வாகக் மிகக் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா அரசு விழாவாகத் தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் இன்று மிகக் கோலாகலமாகத் தொடங்கியது. இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்தச் வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவினையொட்டி ஒட்டுமொத்தத் தஞ்சாவூர் மாநகரமே வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

கம்பீரமான பாரம்பரிய ஊர்வலம்:

சதய விழாவின் தொடக்க நிகழ்வாகவும் முக்கிய அம்சமாகவும், மாமன்னன் ராஜராஜ சோழனின் அளப்பரிய சாதனைகளையும் வரலாற்றுப் பெருமைகளையும் பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடத்தப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த பாரம்பரிய ஊர்வலமானது மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாகத் தஞ்சை பெரிய கோவிலைச் சென்றடைந்தது. மேள தாளங்கள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் சோழர் காலப் பெருமையை நினைவூட்டும் மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களும், வரலாற்று ஆர்வலர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Follow Us