AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
வால்பாறையில் அதிர்ச்சி.. சுற்றுலாப் பயணிகளை முட்டித் தள்ளிய காட்டெருமை.. பதறவைக்கும் வீடியோ!

வால்பாறையில் அதிர்ச்சி.. சுற்றுலாப் பயணிகளை முட்டித் தள்ளிய காட்டெருமை.. பதறவைக்கும் வீடியோ!

Sekaran S
Sekaran S | Published: 22 Oct 2026 14:17 PM IST

Valparai Bison Attack: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சின்னக்கல்லார் பகுதியில் சாலையோரம் மேய்ந்துகொண்டிருந்த காட்டெருமை ஒன்று, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளைப் பாய்ந்து தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், வனப்பகுதிகளில் கவனமாக செல்ல வனத்துறை எச்சரித்துள்ளது.

கோவை, அக்.22: கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாகக் காட்டெருமைகள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பிரதான சாலைகளில் அவ்வப்போது கூட்டமாகவும், தனித்தனியாகவும் சுற்றித் திரியும் காட்டெருமைகளைக் காண்பது வாடிக்கையாகிவிட்டது. இயற்கையைக் கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், வனவிலங்குகளின் ஆபத்தை உணராமல் அவற்றின் மிக அருகில் சென்று பார்ப்பதும், செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

சின்னக்கல்லாரில் பாய்ந்து தாக்கிய காட்டெருமை:

இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள புகழ்பெற்ற சின்னக்கல்லார் பகுதியில் இரு காட்டெருமைகள் சாலையோரப் புல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அந்த வழியே வாகனங்களில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், வழக்கம்போல் மிருகங்களின் நடமாட்டத்தைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்ல முயன்றனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு சுற்றுலாப் பயணிகளை நோக்கி, எதிர்பாராத விதமாகச் சீறிப் பாய்ந்த காட்டெருமை ஒன்று வாகனத்தை மோதித் தாக்கியது. காட்டெருமையின் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த பயணிகள் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்தனர்.

Follow Us