AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
ஒரே வாரத்தில் 2 பேர் பலி - 50 பேர் காயம்.... சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மரண பள்ளங்கள்

ஒரே வாரத்தில் 2 பேர் பலி – 50 பேர் காயம்…. சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மரண பள்ளங்கள்

Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Oct 2026 16:49 PM IST

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரண பள்ளங்களால், அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி, காமலாபுரம் ரவுண்டானா பகுதிகளில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் கட்டப்பட்ட நிலையில், அதற்காக உடைத்து சேதமடைந்த சர்வீஸ் சாலைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் கிடக்கின்றன.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரண பள்ளங்களால், அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி, காமலாபுரம் ரவுண்டானா பகுதிகளில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் கட்டப்பட்ட நிலையில், அதற்காக உடைத்து சேதமடைந்த சர்வீஸ் சாலைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் கிடக்கின்றன. தற்போது பெய்து வரும் மழையால் சாலைகள் மேலும் சிதிலமடைந்து, வாகன ஓட்டிகளுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் பள்ளங்களாக மாறியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பலரும் உடல் உறுப்புகளை இழக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழப்புகளை தடுக்க, சேதமடைந்த சர்வீஸ் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Follow Us