‘மண் வந்து பஸ்ஸை அமுக்கியது” – உயிர் தப்பிய நடத்துநர் உருக்கமான பேட்டி
Nilgiris Landslide : நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பர்லியார் மலைப் பாதையில், மண் சரிவில் சிக்கிய அரசுப் பேருந்தின் இடிபாடுகளுக்குள் பல மணி நேரம் உயிருக்குப் போராடி மீட்கப்பட்ட நடத்துநர் கேசவன், தற்போது மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பர்லியார் மலைப் பாதையில், மண் சரிவில் சிக்கிய அரசுப் பேருந்தின் இடிபாடுகளுக்குள் பல மணி நேரம் உயிருக்குப் போராடி மீட்கப்பட்ட நடத்துநர் கேசவன், தற்போது மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தின் பயங்கரம் குறித்தும், 7 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அந்தத் திக், திக் நிமிடங்கள் குறித்தும் அவர் அளித்த பிரத்யேக வாக்குமூலம் அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது. குன்னூரில் இருந்து கோவைக்கு நள்ளிரவில் இயக்கப்பட்ட அந்த அரசுப் பேருந்தில் மொத்தம் 7 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். மலைப்பாதையில் பெய்து வந்த கன மழை காரணமாகச் சூழல் அபாயகரமாக இருப்பதை ஓட்டுநர் ஜனகராஜும், நடத்துநர் கேசவனும் முன்கூட்டியே உணர்ந்து உள்ளனர். நிலவரத்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப பயணிகளிடம் விளக்கிக்கூறி, மண் சரிவு ஏற்படும் அபாயம் நிறைந்த பகுதிக்குச் சற்று தொலைவிலேயே, அதாவது பர்லியாரிலேயே 7 பயணிகளையும் பாதுகாப்பாக இறக்கி விட்டு உள்ளனர் இவ்வாறு பேருந்து நடத்துநர் தெரிவித்தார்.
