பெரம்பலூர் அருகே வெள்ளாற்றில் சிக்கிய 9 பேர் பத்திரமாக மீட்பு!
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் இருந்து அரங்கூர் செல்லும் பாதையில் உள்ள வெள்ளாற்றில் சிக்கிய 9 பேரைத் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி பத்திரமாக மீட்டனர். கடந்த மாதம் அப்பகுதியில் பொருட்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த ராட்டினங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றுவதற்காக ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த செல்வா, கிருஷ்ணன், மூர்த்தி, ராஜாராம், தினேஷ், வரதராஜ பெருமாள், பெரியசாமி, கார்த்தி, பாரத் ஆகிய 9 பணியாளர்கள் சென்றுள்ளனர்.

அப்போது ஆர்ப்பரித்து வந்த வெள்ளாற்று நீரில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்டத் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அவர்கள் லெப்பைக்குடிகாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.