AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் கடந்த சில நட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Oct 2026 10:53 AM IST

சென்னை, அக்டோபர் 26 : தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக தொடர் விலை சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று (அட்கோபர் 26, 2026) இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது, இன்று தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் சரிவுக்கு பிறகு விலை உயரும் தங்கம்

பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தி வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் காரணமாக தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வந்தது. இந்த காரணிகளால் உலக முதலீட்டாளர்கள் தங்கத்தை கைவிட்டு, பத்திரங்களில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

இதையும் படிங்க : 53% சரிவை சந்தித்த வெள்ளி.. அதளபாதாளத்திற்கு சென்றது ஏன்?.. முக்கிய காரணிகள்!

ஆனால், தற்போது இந்தியாவில் தங்கம் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான பொதுமக்கள் பண்டிகை மற்றும் திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக நகை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக தங்கம் மீண்டும் விலை உயர்வை சந்திக்க தொடங்கியுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,085-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,275-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.220-க்கும், ஒரு சவரன் ரூ.2,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : வரலாறு படைத்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ: ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் விண்ணப்பங்கள்

இந்தியாவில் பண்டிகை காலத்தை ஒட்டி தங்கம் விலை உயர்ந்தாலும், அது நீடிக்காது என்றும் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தும் பட்சத்தில் தங்கம் விலை மேலும் குறையும் என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us