AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

SBI வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்துக்கு சிக்கலா?.. வங்கி கூறுவது என்ன?

SBI Message To Customers On Data Leak | எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களின் விவரங்கள் டார்க் வெப்பில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி தனிப்பட்ட முறையில் விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

SBI வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்துக்கு சிக்கலா?.. வங்கி கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Oct 2026 11:27 AM IST

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (SBI – State Bank Of India) வாடிக்கையாளர்களின் தரவுகள் இணையத்தில் கசிந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தரவுகள் கசிந்துள்ள நிலையில், தங்கள் வங்கி கணக்குகளில் உள்ள பணத்திற்கு ஆபத்து ஏற்படுமா என வாடிக்கையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் தான், எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு என்ன கூறியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட எஸ்பிஐ

 Siriusim என்ற பெயரை கொண்ட ஹேக்கார் அல்லது மோசடி கும்பல் எஸ்பிஐ வங்கியுடன் தொடர்பில் உள்ள ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளை கசிய விட்டதாக Cyber Pulse என்ற சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு மூலம் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியானது. தாவது, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள், கடன் விண்ணப்பங்கள் மற்றும் கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் டார்க் வெப்பில் கசியவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : PF பேலன்ஸ் செக் பண்ண ஒரே ஒரு SMS போதும்.. எப்படி தெரியுமா?

3,897 வாடிக்கையாளர்களின் தகவல்கள் கண்டுபிடிப்பு

டார்க் வெப்பில் மொத்தமாக சுமார் 3,75,000 பதிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் சுமார் 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் இருப்பதாக எஸ்பிஐ விளக்கம் அளித்துள்ளது. அதாவது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வாடிக்கையாளர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் குடியிருப்பு முகவரி ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Bank Holiday : நவம்பர் மாதம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. பட்டியல் இதோ!

முக்கியமான விவரங்களும் கசிந்துள்ளது

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மட்டுமன்றி, கிளை மற்றும் வாடிக்கையாளர் தகவல் கோப்பு அடையாள எண்கள் மற்றும் கடன் பதிவுகள் தொடர்பான மெட்டா டேட்டா போன்ற தகவல்கள் மற்றுஜ்ம் விவரங்களும் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், வாடிக்கையாளர்களை எஸ்பிஐ வங்கி தொடர்ப்புக்கொண்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், அவர்களின் கணக்கு, பேலன்ஸ் மற்றும் பணம் என அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Follow Us