AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

53% சரிவை சந்தித்த வெள்ளி.. அதளபாதாளத்திற்கு சென்றது ஏன்?.. முக்கிய காரணிகள்!

Silver Price Drops 53 Percentage | வெள்ளி விலை நாளுக்கு நாள் மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டில் மட்டும் வெள்ளி விலை சுமார் 53 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Oct 2026 09:57 AM IST
2026 தங்கம் மற்றும் வெள்ளிக்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை. காரணம், சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. தங்கத்தை விடவும் வெள்ளி மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, ஆண்டின் தொடக்கத்தில் ரூ.4.2 லட்சத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட வெள்ளி தற்போது வெறும் ரூ.2,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 / 5
அதன்படி பார்த்தால் வெள்ளி விலை சுமார் 53 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இறுதி மட்டும் 2026 ஆம் ஆண்டு தொடக்க காலக்கட்டத்தில் தங்கத்தை விடவும் வெள்ளி மிக வேகமாக உயர்வை சந்தித்து வந்தது. ஆனால், தற்போது நிலமை தலைகீழாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

2 / 5
உள்நாட்டு தேவை, அதிகப்படியான சீன கொள்முதல், தங்கம் விலையின் காரணமாக முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்தது என 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெள்ளி கடும் உச்சத்தில் செல்ல முக்கிய காரணிகளாக இருந்தன. ஆனால், இந்த காரணிகள் நீடிக்காத காரணத்தால் ஏறிய வேகத்தில் வெள்ளி விலை இறங்கியது.

3 / 5
ஈரான் - அமெரிக்கா போர், அதன் காரணமாக விலை உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய் மற்றும் பணவீக்கத்தின் காரணமாக உலக மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகளை குறைத்து பத்திரங்களில் அதிக முதலீடுகள் குவிய வழிவகை செய்துள்ளன.

4 / 5
ஏற்கனவே அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கம் காரணமாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில், பணவீக்கம் குறையாததன் காரணமாக இந்த மாத இறுதியில் மேலும் வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் சரியும் வாய்ப்பு உள்ளது.

5 / 5
Follow Us