AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Prabhas: பிக்கெஸ்ட் ரிபெல் சோல்ஜர்.. இணையத்தில் வைரலாகும் பிரபாஸின் ஃபௌசி படத்தின் கிளிம்ப்ஸ்!

Prabhas Fauzi Movie: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர்தான் ரிபெல் ஸ்டார் பிரபாஸ். இவர் நேற்று (23/10/2026) தனது 47வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியிருந்தார். அதை முன்னிட்டு இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் இவர் நடித்துவரும் ஃபௌசி படத்தின் முதல் கிளிம்ப்ஸ் மற்றும் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

Prabhas: பிக்கெஸ்ட் ரிபெல் சோல்ஜர்.. இணையத்தில் வைரலாகும் பிரபாஸின் ஃபௌசி படத்தின் கிளிம்ப்ஸ்!
ஃபௌஸி திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Oct 2026 10:31 AM IST

தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் ஒருவராக இருந்துவருபவர் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் (Rebel Star Prabhas). இவரின் நடிப்பில் தற்போது கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் தி ராஜா சாப் (The Raja Saab). இயக்குநர் மாருதி இதை இயக்கியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பல விமர்சனங்களை இப்படமானது எதிர்கொண்டது. இந்த படமானது இவருக்கு வரவேற்பை கொடுக்கவில்லை என்ற நிலையில், பேக் டூ பேக் பிரம்மாண்ட இயக்குநர்களுடன் படங்களில் இணைந்துள்ளார். சீதா ராமம் பட இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இயக்கத்தில் ஃபௌசி (Fauzi Movie), அஷ்வின் இயக்கத்தில் கல்கி 2 (Kalki 2) மற்றும் அனிமல் பட இயக்குநரின் இயக்கத்தில் ஸ்பிரிட் (Spirit Movie) போன்ற திரைப்படங்களில் இணைந்துள்ளார்.

அந்த விதத்தில் நேற்று (23/10/2026) பிரபாஸ் தனது 47வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியிருந்தார். அந்த விதத்தில் அவரின் பிறந்தநாள் முடிவில் ஃபௌசி படத்திலிருந்து பிரபாஸின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: வித்தியாசமாகப் பார்க்க வைத்த கதை.. மஞ்சணத்தி படத்தின் ஷூட்டிங்கை முடித்த கயாடு லோஹர்!

பிரபாஸின் ஃபௌசி திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த ஃபௌசி திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாகிஸ்தானிய நடிகை இமான்வி இஸ்மாயில் நடித்துவருகிறார். அவர்களுடன் அனுபம் கேர், ஜெயா பிராடா, சஜ்ஜிடி டெலொப்பிரூ மற்றும் மீதும் சக்ரபோர்ட்டி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: அப்பாவ போல… விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

இந்த படமானது 1932-ம் காலகட்டத்தில் இந்தியாவின் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் நடக்கும் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறதாம். அந்த விதத்தில் இந்த படத்தை வரும் 2027ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

பிரபாஸின் ஃபௌசி திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் பிரபாஸ் கையில் ரத்த கரையுடன், மிக பிரம்மாண்டமான மிஷின்கன் ஒன்றை சுடுவதற்கு தயார் செய்வதுபோல காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபாஸ் ஆசாத் ஹின்ட் பாவுஜ் சோல்ஜராக நடிப்பதாக கூறப்படுகிறது. அதனால் இந்த படத்திற்கு ஃபௌசி என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த படமானது தெலுங்கு மொழியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும், பான் இந்திய மொழிகளில் வெளியிடப்படுகிறதாம். ஃபௌசி திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us