AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Kayadu Lohar: வித்தியாசமாகப் பார்க்க வைத்த கதை.. மஞ்சணத்தி படத்தின் ஷூட்டிங்கை முடித்த கயாடு லோஹர்!

Kayadu Lohar Manjanathi Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கயாடு லோஹர். இவர் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மஞ்சணத்தி திரைப்படத்தில் நடித்துவந்த நிலையில், தனது கதாபாத்திரத்திற்கான ஷூட்டிங்கை அவர் நிறைவு செய்துள்ளாராம். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

Kayadu Lohar: வித்தியாசமாகப் பார்க்க வைத்த கதை.. மஞ்சணத்தி படத்தின் ஷூட்டிங்கை முடித்த கயாடு லோஹர்!
கயாடு லோஹரின் மஞ்சணத்தி படம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 23 Oct 2026 19:02 PM IST

தமிழில் டிராகன் (Dragon) திரைப்படத்தின் மூலமாக நடிகையாக நுழைந்தவர்தான் கயாடு லோஹர் (Kayadu Lohar). இவர் கன்னட சினிமாவின் மூலம் சினிமாவில் நாயகியாக நுழைந்த நிலையில், மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சூர்யா (Suriya) முதல் நானி (Nani) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து படங்களில் பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் தி பாரடைஸ் (The Paradise). இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பின் தமிழில் இவர் சூர்யா48 மற்றும் மஞ்சணத்தி போன்ற படங்களில் நடித்துவருகிறார். இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில், இவர் நடித்துவந்த திரைப்படம்தான் மஞ்சணத்தி (Manjanathi Movie).

இந்த படத்தில் கயாடு லோஹர், பிரியங்கா மோகன், கதிர் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துவரும் நிலையில், தனது கதாபாத்திரத்திற்கான ஷூட்டிங்கை கயாடு லோஹர் நிறைவு செய்துள்ளாராம். இது குறித்த இன்ஸ்டாகிராம் பதிவை அவர் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ப்ளூ டீம் கேப்டனை கேள்வி கேட்கும் போட்டியாளர்கள்.. கண்ணீரில் வினோத் பாபு – என்ன நடக்குது?

மஞ்சணத்தி படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்ததாக கயாடு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)

இந்த பதிவில் நடிகை கயாடு லோஹர், “ஒரு வேறுபட்ட பள்ளி, ஒரு வேறுபட்ட நான், மேலும், விஷயங்களை நான் சற்றே வித்தியாசமாகப் பார்க்க வைத்த ஒரு கதைசொல்லி, மஞ்சணத்தி படத்தின் ஷூட்டிங் நிறைவு என அதில் அவர் கூறியுள்ளார். தற்போது இந்த படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

மாரி செல்வராஜின் மஞ்சணத்தி திரைப்படம்:

இந்த மஞ்சணத்தி திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் நிலையில், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அவரே தயாரித்தும் வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன், கதிர், கயாடு லோஹர், பூர்ணிமா மற்றும் நடிகர் விது உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: என்ன தவறு..? அப்படிப் பார்ப்பது முட்டாள்தனம் – ராஷ்மிகா மந்தனா பேச்சு!

இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு பூஜைகளுடன் தொடங்கியது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும் நிலையில், படத்தின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்த படமானது பெண்களை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவரும் திரைப்படம் என்ற நிலையில் வரும் 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us