AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ப்ளூ டீம் கேப்டனை கேள்வி கேட்கும் போட்டியாளர்கள்.. கண்ணீரில் வினோத் பாபு – என்ன நடக்குது?

Bigg Boss Vinoth Babu Emotional: தமிழில் விறுவிறுப்பான டாஸ்க் மற்றும் போட்டியலுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியில் சர்வைவல் டாஸ்க் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதில் ப்ளூ டீம் கேப்டன் வினோத் பாபுவை கேள்விகேட்கும் அணியினர் மற்றும் ஜேசனால் அவர் கண்ணீர் விடுவது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ப்ளூ டீம் கேப்டனை கேள்வி கேட்கும் போட்டியாளர்கள்.. கண்ணீரில் வினோத் பாபு – என்ன நடக்குது?
பிக் பாஸ் வினோத் பாபு எமோஷனல்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 23 Oct 2026 16:23 PM IST

தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது (Bigg Boss Season 10 Show) ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி இன்றுடன் (23/10/2026) கிட்டத்தட்ட 47 நாட்களாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) ஆங்கராக பணியாற்றிவரும் நிலையில், வாரம் வாரம் போட்டியாளர்களை சந்தித்து தனது கேள்வி ஜாலத்தால் மேலும் இந்நிகல்லியை சுவாரஸ்யமாக்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 2026ம் ஆனது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய நிலையில், தற்போதுவரை சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 5வது வாரத்தில் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் நுழைந்த நிலையில், இந்நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யமாகியுள்ளது. அந்த விதத்தில் டிடிஃஎப் வாசன் இந்நிகழ்ச்சியை தொடரும் நிலையில், போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தில் சர்வைவல் டாஸ்க் (Survival Task) சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், அதில் ப்ளூ டீமின் தலைவராக வினோத் பாபு இருக்கிறார்.

ஜேசன் ரெட் டீமிலிருந்து தற்போது ப்ளூ டீமுக்கு தனது ஆதரவை கொடுக்கும் நிலையில், இது குறித்து வினோத் பாபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து வினோத் பாபு கண்கலங்கியது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: என்ன தவறு..? அப்படிப் பார்ப்பது முட்டாள்தனம் – ராஷ்மிகா மந்தனா பேச்சு!

ஜேசனால் பிக் பாஸ் வீட்டில் கண்கலங்கிய வினோத் பாபு:

இந்த ப்ரோமோவில், லக்ஷ்மி பிரியா வினோத் பாபுவிடம், நீங்கள் இவ்வாறு ஒரு பிளான் போட்டுருக்கீங்க அதை என் ப்ளூ டீம் போட்டியாளர்களிடம் சொல்லவில்லை என கேட்கிறார். வினோத் பாபுவும் அதற்க்கு விளக்கம் கொடுத்து, திட்டம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என நினைத்ததாக கூறியிருந்தார்.

இதையும் படிங்க: எனது ஆதரவு ப்ளூ டீம்-க்குதான்.. ஜேசனால் ப்ளூ டீம் இடையே ஏற்பட்ட பிரச்சனை!

மேலும் ஜேசனிடம் தான் சொன்ன பிளானை அவர் போட்டுடைத்ததாக ஏற்கனவே வாக்குவாதம் செய்த நிலையில், அது குறித்து அன்சரிடம் கூறி, வினோத் பாபு கண்கலங்குவது தொடர்பாக இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியிருந்த இந்த ப்ரோமோ இணையத்தில் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 10 ஷாவின் 47வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி சிறப்பாக மற்றும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சர்வைவல் டாஸ்கிங் ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் என இரு அணியினரிடையேயும் சிறப்பான போட்டிகள் இருக்கிறது. இந்த் வாரத்தின் முடிவில் எந்த அணியானது வெற்றிபெறுகிறது என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us