AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எனது ஆதரவு ப்ளூ டீம்-க்குதான்.. ஜேசனால் ப்ளூ டீம் இடையே ஏற்பட்ட பிரச்சனை!

Bigg Boss Jasons Survival Task: இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ். தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் சர்வைவல் டாஸ்கில் கட்சிமாறிய ஜேசனால் ப்ளூ டீம் இடையே பிரிவினை வந்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வைரலாகிவருகிறது.

எனது ஆதரவு ப்ளூ டீம்-க்குதான்.. ஜேசனால் ப்ளூ டீம் இடையே ஏற்பட்ட பிரச்சனை!
பிக் பாஸ் தமிழ் 10Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Oct 2026 10:37 AM IST

தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது ஆரம்பமாகி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 2026 செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமான நிலையில், இன்றுடன் (23/10/2026) கிட்டத்தட்ட 47 நாட்களாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரி, எவிக்ஷன் எல்லாவற்றையும் கடந்து தற்போது மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் உள்ளனர். 7வது வாரமானது தொடக்கத்திலே சர்வைவல் டாஸ்க்குடன் (Survival Task) ஆரம்பமானது. அந்த வகையில் ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் என போட்டியாளர்கள் பிரிக்கப்பட்ட நிலையில், இதில் ஜேசன் ரெட் அணியில் இருந்தபடியே ப்ளூ டீம்-க்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

இது மிகப்பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இது ப்ளூ டீம்-க்கு இடையேயும் பிரச்சனையை கிளப்பியுள்ளது. இது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சீன் படத்திலிருந்து வெளியானது நஸ்லேனின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ

ஜேசனால் ப்ளூ டீம்-க்கு இடையே எழுந்த பிரச்சனை:

இந்த ப்ரோமோவில், ஜேசன் மற்றும் வினோத் பாபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுபோல் காண்பிக்கப்பட்டுள்ளது. உடனே ஜேசன், எல்லா போட்டியாளர்கள் இடையேயும் நான் ரெட் அணியில் இருந்தாலும், ப்ளூ டீம்-க்குதான் என்னது ஆதரவு என கூறியிருந்தார். மேலும் வினோத் பாபு மற்றும் ஜேசன் மத்தியில் வாக்குவாதம் இருந்தது.

இதையும் படிங்க: ராமாயணா படத்தை அனைவரும் 3டியில் பார்க்க வேண்டும் – சாய் பல்லவி!

உடனே ஜேசன் லக்ஷ்மி பிரியாவிடம், நான் ஆரம்பத்திலே ரெட் டீமில் இருக்கத்தான் விரும்பினேன். ஆனால் ஷமா என்னை வேண்டாம் என்கிறார், அதை தொடர்ந்து வினோத்தும் என்னை வேண்டாம் என கூறியிருந்தார். அந்த காரணத்திற்காக மட்டுமே ரெட் டீம் சென்றேன். எனக்கு அங்குள்ள கேப்டன்ஷிப் பிரிக்கல என அவர் லக்ஷ்மி பிரியாவிடம் புலம்புவது போல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 47வது நாளின் முதல் ப்ரோமோ:

இந்த வாரத்தில் சர்வைவல் டாஸ்கில் பல சண்டைகள், ப்ளூ அணியில் திமிரு மட்டும் ரெட் அணியினரின் திருட்டு என இந்த டாஸ்க் நன்றாக மற்றும் விறுவிறுப்பாகவும் இருந்தது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் ஜேசன் ஆடிய டபுள் கேம் ஒட்டுமொத்த போட்டியாளர்கள் இடையேயும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது என கூறலாம். மேலும் டிடி ஃஎப் வாசன்-ஐ ரெட்கார்ட் வாங்க வைக்கவேண்டும் என போட்டியாளர்கள் திட்டமிடுவது குறித்தும் இந்த வாரத்தில் பேச்சுக்கள் நடைபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us