AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சீன் படத்திலிருந்து வெளியானது நஸ்லேனின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ

Revealing Eeswaran From Scene Movie | நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேனின் கதாப்பாத்திர வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீன் படத்திலிருந்து வெளியானது நஸ்லேனின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ
சீன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Oct 2026 18:44 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படம் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் மூன்றாவது படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீன் படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இவரது இயக்கத்தில் மலையாள சினிமாவில் வெளியான ரோமாஞ்சம் மற்றும் ஆவேசம் என இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த சீன் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா நஸீம் மற்றும் நஸ்லேன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இதில் நஸ்ரியா நஸீன் நாயகியாக நடித்து உள்ள நிலையில் நடிகர் நஸ்லேன் நெகட்டிவ் வேடத்தில் நடித்து இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வந்தது.

சீன் படத்திலிருந்து வெளியானது நஸ்லேனின் கதாப்பாத்திர வீடியோ:

இந்த நிலையில் நடிகர் நஸ்லேனின் கதாப்பாத்திரம் என்ன என்பது குறித்து சீன் படத்திலிருந்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த சீன் படத்தில் நடிகர் நஸ்லேனின் கதாப்பாத்திரத்திற்கு ஈஸ்வரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் நஸ்லேன் ஒரு தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரனாக அந்தப் படத்தில் நடித்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்தப் படம் வருகின்ற நவம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… நலம் நலமறிய ஆவல், தஞ்சாவூரு மண்ணு எடுத்து… சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

சீன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் நீல அணியின் வெற்றியை திருடும் சிவப்பு அணி… வைரலாகும் வீடியோ!

Follow Us