AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Santhanam: சந்தானத்தின் 20வது திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Santhanam 20th Movie: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நுழைந்து, தற்போது ஹீரோவாக புதிய படங்களில் நடித்துவருபவர் சந்தானம். அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் தனது 20வது திரைப்படத்தில் நடித்துவந்த நிலையில், ஷூட்டிங் நிறைவடைந்தது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் முதல் பார்வையை சந்தானம் பகிர்ந்துள்ளார்.

Santhanam: சந்தானத்தின் 20வது திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தானம் அதிசய பிறவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Oct 2026 18:08 PM IST

கோலிவுட் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் நகைச்சுவை நடிகராக படங்களில் நடித்துவந்தவர் சந்தானம் (Santhanam) . இவர் நடிகர் சிலம்பரசனின் மன்மதன் (Manmadhan) என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன் சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இவர் சினிமாவில் ஹீரோவாக நடித்துவருகிறார். இவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 (Jailer 2 Movie) படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், படத்தின் டைமிங் காரணமாக அந்த காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த விதத்தில் தனது புதிய படத்தின் ஷூட்டிங்கில் சந்தானம் தீவிரமாக இருந்துவருகிறார்.

இந்நிலையில் இவர் அறிமுக இயக்குநர் சுதமன் கிருஷ்ணா (Sudhaman Krishna) இயக்கத்தில் தனது (Santa20) 20வது படத்தில் நடித்துவருவதாக கூறப்பட்டது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இன்று (20/10/2026) இப்படத்தின் முதல் பார்வையை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: அது அட்லீயின் உலகம்… ராக்கா திரைப்படம் குறித்து சூப்பரான அப்டேட் கொடுத்த இயக்குநர் அனல் அரசு!

சந்தானம் பகிர்ந்த தனது 20வது படத்தின் முதல் பார்வை குறித்த எக்ஸ் பதிவு:

சந்தானத்தின் 20வது திரைப்படத்திற்கு படக்குழு “அதிசய பிறவி” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படமானது முழுக்க ஆக்ஷன் மற்றும் கிரைம் திரில்லர் பானையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க அவருடன் நடிகர்கள் கோபிகா ரமேஷ், ஜேசன், ரெடின் கிங்ஸ்லி, மற்றும் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படத்தை வென்யு மற்றும் K7 போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: அவினாஷ் மீதுள்ள கோபம்.. ப்ளூ டீமுடன் இணைய நினைக்கும் ஜேசன் – என்ன நடக்குது பிக் பாஸில்..!

இவர் முதல் முறையாக சந்தானத்தின் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், 2026ம் ஆண்டின் இறுதியில் வெளியிட படக்குழு திட்டம். ஏற்கனவே சந்தானத்தின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டு தொடக்கத்தில் டிடி நெட்க்ஸ்ட் லெவல் என்ற படமானது வெளியாகி படுதோல்வி அடைந்திருந்தது. அந்த படத்தை போல இல்லாமல் இந்த படம் சந்தானத்திற்கு வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us