அவினாஷ் மீதுள்ள கோபம்.. ப்ளூ டீமுடன் இணைய நினைக்கும் ஜேசன் – என்ன நடக்குது பிக் பாஸில்..!
Bigg Boss 10 Survival Task: பிக் பாஸில் ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் என இரு அணிகளாக பிரிக்கப்பட்ட நிலையில், அந்த அணியின் தேவையை டிமாண்ட் செய்தே பூர்த்தி செய்யவேண்டும். அந்த விதத்தில் ரெட் அணியிலிருந்து ப்ளூ அணிக்கு ஜேசன் செல்வது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் தொடங்கிய நிலையில், இன்றுடன் (20/10/2026) 44 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்துவரும் நிலையில், தீவிரமாக மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 7வது வாரத்தின் தொடக்கத்திலே சர்வைவல் டாஸ்க்- உடன் (Survival task) சிறப்பாக தொடங்கப்பட்டது. அந்த விதத்தில் இன்று (20/10/2026) இந்த டாஸ்கிங் முதல் நாள் என்ற நிலையில், ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அந்த விதத்தில் இந்த இரு அணிகளும் அவரவர் அவர்களின் தேவைகளுக்காக டிமாண்ட் வைக்கலாம் மற்றும் இந்த டாஸ்கிங் முதல் வெற்றியாளராக ப்ளூ டீம் உள்ள நிலையில், அவர்களுக்கே பவர் அதிகமாக உள்ளது. அந்த விதத்தில் இந்த வாரத்திற்கான பட்ஜெட் டாஸ்கின்போது, இந்த இரு அணிகளும் கிச்சன் அறைக்கு டிமாண்ட் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பிரேமலு 2 படம் கைவிடப்பட்டதற்கு இதுதான் காரணம்… இயக்குநர் ஓபன் டாக்
ரெட் அணியிலிருந்து ப்ளூ அணிக்கு மாற நினைக்கும் ஜேசன்:
இந்த ப்ரோமோவில், ரெட் அணியிலிருந்து அவினாஷ், இந்த வாரத்திற்கான பட்ஜெட்டில் 50 / 50 பிரித்துக்கொள்ளலாம். அப்படியென்றால் நீங்கள் கிச்சனில் கேஸ் அடுப்பை வைத்துக்கொள்ளுங்கள் என கூறுகிறார். ரெட் டீமின் தலைவராக இருந்து இந்த டிமானதை வைப்பதுபோல அவினாஷ் பேசிய நிலையில், ப்ளூ அணியினர் எழுந்து சென்றுவிட்டனர்.
இதையும் படிங்க: வாரணாசி படத்தின் ஷூட்டிங்கில் அது பெரிய சவாலாக இருந்தது – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேச்சு!
அந்த விதத்தில் உடனே எழுந்த ஜேசன், ப்ளூ அணியினர் சரியான டிமாண்டை வைக்கிறார்கள், அவர்கள் சொல்வதுதான் சரி என்பதுபோல, ப்ளூ அணிக்கு ஆதரவாக பேசுகிறார். உடனே ப்ளூ அணியில் உள்ள அன்சர், ஜேசனை ரெட் அணியை விட்டு ப்ளூ அணிக்கு வருமாறு பேசியபடி இந்த ப்ரோமோ உள்ளது. கடந்த வாரத்தில் ஜேசன் மற்றும் அவினாஷ் இருவரிடையே மோதல் நடந்த நிலையில், அதன் காரணமாகவே ஜேசன் இவ்வாறு செய்கிறாரா? என இணையத்தில் பேசப்பட்டுவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 44வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day44 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/ujXiwMnNtY
— Vijay Television (@vijaytelevision) October 20, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 7வது வாரத்தில் சர்வைவல் டாஸ்க்குடன் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பேக் டூ பேக் சுவாரஸ்யங்களுடன் இந்த நிகழ்ச்சியானது இருக்கும் நிலையில், இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ப்ரீ பாஸை டிடிஃஎப் வாசன் பெற்றுள்ளார். ஆனாலும் அவர் இந்த வீட்டில் சரியான ஆட்டத்தை ஆடவில்லை என முகேஷ் மற்றும் லட்சுமி பிரியா இருவருமே அவரை தேர்ந்தெடுத்து நாமினேட் செய்துள்ளனர். மேலும் தற்போது இந்த சர்வைவல் டாஸ்க்குடன் இந்த வாரமானது சுவாரஸ்யமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



