AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சர்வைவல் டாஸ்க் டே 1… ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் இடையே பிரிவினை!

Bigg Boss 10 Survival Task: தமிழில் மக்கள் மத்தியில் சிறப்பான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியில் தற்போது சர்வைவல் டாஸ்க் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதை முன்னிட்டு ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் இடையே ஏற்பட்ட பிரிவினைகள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சர்வைவல் டாஸ்க் டே 1… ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் இடையே பிரிவினை!
சர்வைவல் டாஸ்க் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 20 Oct 2026 10:30 AM IST

பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கி விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. விஜய் சேதுபதி தொகுத்துவரும் இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியானது மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்து வெளியேற்றம் மற்றும் வைல்ட் கார்ட் என்ட்ரி என போட்டியே விறுவிறுப்பாக இருந்தது. கடந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் என்ற நிலையில், ராகவ் ரங்கநாதன் மற்றும் சாந்தினி தமிழரசன் என இருவரும் வெளியேறியிருந்தனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 16 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் 7வது வாரத்தின் தொடக்கத்தின்போதே சர்வைவல் டாஸ்க்குடன் தொடங்கிய நிலையில், சிறப்பாக வரவேற்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (20/10/2026) இந்த டாஸ்கிங் டே 1 என்ற நிலையில், ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் இடையே பிரிவினைகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? அப்டேட் இதோ

பிக் பாஸில் சர்வைவல் டாஸ்கில் இரண்டாக பிரிந்த ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம்:

7வது வாரத்தின் தொடக்கத்தில் இந்த சர்வைவல் டாஸ்க் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. நேற்றே இந்த டாஸ்க் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்றுதான் டே 1 ஆம். அந்த விதத்தில் படுக்கை அறை , கிட்சன், லிவிங் ரூம் போன்றவற்றில் ரெட் அணியினருக்கு தனியாகவும், ப்ளூ அணியினருக்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரேமலு 2 படம் கைவிடப்பட்டதற்கு இதுதான் காரணம்… இயக்குநர் ஓபன் டாக்

இந்த முதல் டாஸ்கில் எந்த அணி வெற்றிபெறுமோ அந்த அணியிக்கே பவர் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. தங்களின் தேவைக்காக ரெட் அணி மற்றும் ப்ளூ அணி இருவரும் சண்டை போடலாம் எப்போது போல இந்த டாஸ்கில் அறிவிக்கப்பட்டிருந்தது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 44வது நாளின் 1வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த சர்வைவல் டாஸ்கின்போது நேற்று (19/10/2026) டிடிஃஎப் வாசன் மற்றும் முகேஷ் இருவருமே சண்டையிட்டிருந்தனர். டாஸ்கின்போது முகேஷ், வாசன்-ஐ உசுப்பேத்தும் விதமாக அதில் பேசிய நிலையில், இதுவே இந்த சண்டைக்கு முக்கிய காரணமாக இருந்தது. அந்த விதத்தில் பிக் பாஸில் இந்த சர்வைவல் டாஸ்க் இன்னும் அடிதடியுடன் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us