அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? அப்டேட் இதோ
Ajith Kumars Daredevil movie shooting update | நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் டேர் டெவில். இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைர்லாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்தும் அடுத்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்க மற்றொரு பக்கம் நடிகர் அஜித் குமார் தீவிரமாக தனது கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி பல நாடுகளில் ரேஸிங்கில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொடர்ந்து கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக் உருவாக உள்ள படத்திற்கு டேர்டெவில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிரச்சனை இருந்த நிலையில் அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித் குமார் படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.




அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?
இந்த நிலையில் இந்த ஆண்டிலேயே படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அஜித் குமாரின் ‘டேர் டெவில்’ (Dare Devil) படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் படப்பிடிப்பு நவம்பர் 2-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இப்படம் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்படவுள்ளது. உன்னி முகுந்தன் மற்றும் உபேந்திரா ஆகியோர் இப்படத்தின் நட்சத்திரக் குழுவில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read… க்ரைம் த்ரில்லர் பாணியில் அர்ஜுன் தாஸின் புது படத்தின் டைட்டில் இதுதான் – வைரலாகும் அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#AjithKumar’s #DareDevil Shooting Update 🔥
* Shooting is reportedly set to begin on November 2.
* The film’s shoot will commence in Chennai and Hyderabad.
* #UnniMukundan and #Upendra are expected to be part of the film’s cast. https://t.co/puheWO4fAS
— Movie Tamil (@_MovieTamil) October 17, 2026
Also Read… இன்று மாலை வெளியாகிறது ஓம் படத்திலிருந்து வீழா வீரா பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள்