AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழ் நாட்டின் சூர்யாவின் சீன் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வைரலாகும் அப்டேட்

Suriya's Scene Movie Theatrical Rights Across Tamil Nadu | நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படத்தின் தமிழ் நாட்டு ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் தற்போது கைப்பற்றி உள்ளது.

தமிழ் நாட்டின் சூர்யாவின் சீன் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வைரலாகும் அப்டேட்
சீன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Oct 2026 11:42 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் இதுவரை இரண்டு படங்கள் இந்த 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டில் மூன்றாவதாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் சீன். முன்னதாக சூர்யாவின் நடிப்பில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை தெலுங்கு சினிமா இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி இருந்த நிலையில் அடுத்ததாக தற்போது உருவாகி உள்ள சீன் படத்தை மலையாள சினிமா இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள இந்த சீன் படத்தில் நடிகை நஸ்ரியா நஸீம் நாயகியாக நடித்து உள்ளார். மேலும் நஸ்லேன் முக்கிய வேடத்தில் நடித்து உள்ள இந்தப் படத்தில் யூடியூப் பிரபலம் ராஜ் பிரியனும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சீன் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:

அதன்படி படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூர்யாவின் சீன் படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் பேக்ட்ரி பெற்றுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராகவ்? என்ன காரணம்

சீன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தியேட்டரில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் 2… படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்!

Follow Us